“உங்கள வெளியே அனுப்பிட்டாங்களே!” – வில்லியம்சன் அழகான பதில்!

0
912
Williamson

உலகெங்கிலும் எத்தனையோ கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றாலும், இந்திய ‘பிரிமியர் லீக்’ தான் உலக கிரிக்கெட்டின்  கோலாகலத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது . 2023 ஆம் ஆண்டிற்கான ‘ஐபிஎல்’  கொண்டாட்டத்திற்கு அணிகள் தற்பொழுது தயாராக துவங்கி விட்டன.

நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ‘மினி ஏலம்’  டிசம்பர் 23ஆம் தேதி   ‘கொச்சி’யில்  நடைபெற இருக்கிறது . இந்த ஏலத்திற்கு முன்பாக எல்லா அணிகளும்  தங்கள் அணியில் இருந்து முக்கியமான உலக வீரர்களை விடுவித்துள்ளதால் ,யார் யார் எந்தெந்த அணிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது .

  உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களான  ‘ஆரோன் பின்ச்’ ,’நிக்கோலஸ் பூரான்’,’ஜேசன் ஹோல்டர்’,’டுவெயின்  பிராவோ ‘, ‘வான் டர் டஸ்ஸன்’, ‘ஜிம்மி நிஷாம்’,’முகம்மது நபி’ ,’கேன் வில்லியம்சன்’ ‘அஜிங்க்ய ரஹானே’  ஆகியோர் தங்கள் அணி  நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர் .

‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத்  அணிக்காக 8 ஆண்டுகளாக ஆடி  அந்த அணியின் கேப்டனாகவும் இருந்த  ‘கேன் வில்லியம்சனு’ம்  ஹைதராபாத் அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் . இதனைப் பற்றிய அவரிடம்  கேட்டபோது ”  ஹைதராபாத் அணிக்காக  நீண்டகாலம் ஆடியது மகிழ்ச்சியான ஒரு அனுபவம்”   என்று கூறினார்.

அது பற்றி தொடர்ந்து பேசி அவர்  “ஹைதராபாத்   அணி உடனான பயணத்தில்    2016 ஆம் ஆண்டு  ‘சாம்பியன் பட்டம்’ வென்றது மறக்க முடியாதது” என்று கூறினார் ,  நடக்கவிருக்கும் ‘மினி ஏலம்’ பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” ஏலத்தை பொறுத்தவரையில்  அந்தந்த அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும்,அவர்களுக்கு என்ன தேவை என்று. அதனால் நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்,ஒரு நல்ல அணி என்னை தேர்ந்தெடுக்கும் என்று நம்புகிறேன் , வீரர்களின் ஏலம் என்பது அப்படித்தான் நடக்கும் நம் கைகளில் எதுவும் இல்லை”
என்று தெரிவித்தார் .

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவது பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ” நான் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதையே விரும்புகிறேன், ஒரு கிரிக்கெட் வடிவத்தில் இருந்து இன்னொரு கிரிக்கெட் வடிவத்திற்கு  நம்மை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படக்கூடிய சவால்கள்  ஒரு கிரிக்கெட் வீரராக  என்னை பக்குவப்படுத்துவதற்கு  நிறைய உதவுகிறது ,  அதில் இருக்கக்கூடிய சவால்கள் தான்  ஒரு விளையாட்டு வீரராக என்னை உயிர்ப்புடன் இருக்க வைக்கிறது “, என்று கூறினார் .

“என்னுடைய டி20 கிரிக்கெட்டின் பார்ம்  இன்னும் நான் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை ,  நான் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும்  என்னுடைய இலக்கை உயர்த்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ” என்று பதிலளித்தார்.

‘சன்ரைசர்ஸ்’ ஹைதராபாத் அணிக்காக  இதுவரை 76 போட்டிகளில் ஆடி உள்ள கேன் வில்லியம்சன்  2101 ரன்களை  சேர்த்துள்ளார். அவரது சராசரி  36,