“உன் ரூட்டுதான்யா கரெக்ட்!” – இஷானுக்கு சேவாக் ட்விட் இணைப்பு!

0
1231
Sehwag

பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முதல் இரண்டு போட்டிகள் தோற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தது!

இந்த நிலையில் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதில் களம் கண்ட துவக்க ஆட்டக்காரர் இசான் கிஷான் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்!

துவக்க வீரராக வந்த இசான் கிசான் மற்றொரு துவக்க அனுபவ ஆட்டக்காரர் சிகர் தவான் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அவருக்கு ஒரு முனையில் விராட் கோலி நல்ல ஒத்துழைப்பு தந்தார்.

இதன் தொடர்ச்சியாக இசான் கிஷான் தனது சர்வதேச முதல் சதத்தை 85 பந்துகளில் விளாசினார். இதற்கு அடுத்து மேற்கொண்டு 41 பந்துகளை சந்தித்த அவர் 126 பந்துகளில் இரட்டை சதத்தை விளாசினார். மேற்கொண்டு 131 பந்துகளில் 210 ரன்களை 24 பௌண்டரி மற்றும் 10 சிக்ஸர்களுடன் குவித்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்கள் குவித்தது.

இந்த இரட்டை சதத்தின் மூலம் அதிவேக இரட்டை சதம் அடித்தவர் மற்றும் முதல் இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற இரு உலகச் சாதனைகளை படைத்திருக்கிறார். இவரது இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்தவருமான வீரேந்திர சேவாக் இஷான் கிசானுக்கு தெரிவித்துள்ள வாழ்த்திட்டு ட்வீட்டில் ” சரியான வழியில் சிறப்பான சதம். இந்த அணுகுமுறைதான் உலக கிரிக்கெட்டில் இந்தியாவை மிகச் சிறப்பாக வைக்கும் ” என்று தெரிவித்துள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா இவரது ஆட்டத்தை பாராட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!