ஐ.பி.எலில் இந்த 2 அணிகளுக்கு செல்ல எந்த வீரர்களும் விரும்பமாட்டார்கள் – டேனியல் வெட்டோரி ஆவேசம்

0
539
Daniel Vettori IPL

நவம்பர் 30-ஆம் தேதி எந்த வீரர்களை எல்லாம் தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் வெளியிட்டன. பலரும் நினைத்தபடி முன்னணி வீரர்களை அந்தந்த அணிகள் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக் கொண்டன. பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக சன்ரைசர்ஸ் அணி தங்களின் இரண்டு முன்னணி வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை விடுவித்துள்ளது. அதிக கோப்பைகளை வென்ற இரண்டு முக்கிய அணிகளான சென்னை மற்றும் மும்பை தங்கள் அணிகளில் முக்கிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. ஒரு அணி 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில் அணியின் பலம் குறையாமல் இருக்க நான்கு வீரர்களை இந்த இரண்டு அணிகள் தக்க வைத்துள்ளன.

அதேபோல் பெங்களூரு அணி மூன்று பேர்களை தக்கவைத்துள்ளது. நான்கு வீரர்களை தக்க வைத்த நினைத்திருந்த நிலையில் அந்த அணியின் டிவிலியர்ஸ் ஓய்வு பெற்று விட்டதால் 3 வீரர்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளது பெங்களூரு அணி. கடந்த 3 தொடர்களாக சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது. சென்னை மும்பை போன்ற அணிகளுக்குப் பிறகு அதிக கோப்பைகளை வென்ற கொல்கத்தா அணியும் 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. ஆனால் மற்ற மூன்று அணிகளான சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வழக்கம்போல் இந்த முறையும் சரியான வீரர்களை தக்கவைக்காமல் தடுமாறி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து முன்னாள் பெங்களூரு அணியின் வீரரும் பயிற்சியாளருமான நியூசிலாந்தை சேர்ந்த டேனியல் வெட்டோரி பேசும்பொழுது அணி நிர்வாகம் நினைத்தாலும் வீரர்கள் சரியாக விளையாடாத அணிகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்க விரும்புவதில்லை என்று கூறியுள்ளார். ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் போன்ற அணிகளுக்கு மறுபடியும் மறுபடியும் விளையாடுவதை வீரர்கள் விரும்புவதில்லை என்று அவர் கூறியுள்ளார். சிறப்பாக செயல்படும் அணிகளில் சென்று விளையாட வேண்டும் என்பதுதான் வீரர்களின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தனது முன்னாள் அணியான பெங்களூரு அணி குறித்து பேசும் போது விராட் கோலி கேப்டன் பதவியை துறந்து உள்ள நிலையில் அந்த பொறுப்புக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் சரியான தேர்வாக இருப்பார் என்றும் கூறியுள்ளார் வெட்டோரி.

சிறப்பாக செயல்படும் கே எல் ராகுல், ரஷீத் கான் போன்ற வீரர்கள் எல்லாம் தாங்கள் தற்போது இருக்கும் அணியை விரும்பாமல் வேறு அணிக்கு செல்ல நினைப்பதை பார்க்கும் பொழுது வெட்டோரி கூறியது உண்மை தான் என்று ரசிகர்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.