சி எஸ் கே பயிற்சி முகாமில் யார் எல்லாம் இருக்கிறார்கள்.. யார் மிஸ்சிங்?

0
81

ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் தொடங்குகிறது.  முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறார்கள்.

- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் தோனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பியுள்ளார். இந்த பயிற்சி முகாமில் யார் யாரெல்லாம் இடம்பெற்று இருக்கிறார்கள் என்ற தகவலை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் அனுபவ வீரரான ரகானே முதல் ஆளாக பயிற்சியின் பங்கேற்று இருக்கிறார்.

இதைப் போன்று அடுத்த ஹர்திக் பாண்டியா என்று அழைக்கப்படும் அண்டர் 19 வீரர் ராஜவர்த்தன ஹங்கர்கேகர் இடம்பெற்றிருக்கிறார். இதே போன்று மாற்று தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்ட சேனாபதி மற்றும் அண்டர் 19 துணை கேப்டன் ஷாய்க் ரசித் ஆகியோர் முகாமில் இடம் பெற்று கேட்சிங் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சுழற் பந்துவீச்சாளர் பிரசாந்த் சோளங்கி உள்ளிட்ட வீரர்களும் இடம் பெற்றனர். இதைப் போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடுவும் பயிற்சியில் பங்கேற்று இருக்கிறார்.ஆல்ரவுண்ட் சிவம் துபே பயிற்சியின் முதல் நாளிலேயே தன்னுடைய பந்துவீச்சை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எனினும் சென்னை அணியின் முக்கிய வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட், தீபக்சாகர் ஆகியோர் இன்னும் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது தங்கி இருக்கிறார்கள். ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்தவுடன் தான் சென்னை அணி பயிற்சி முகாமுக்கு திரும்புவார். இதேபோன்று சென்னை அணியில் இதுவரை எந்த வெளிநாட்டு வீரர்களும் பயிற்சி முகாமுக்கு வரவில்லை.

மொயின் அலியை  பொறுத்தவரை வங்கதேச தொடர் முடிந்தவுடன் சென்னைக்கு திரும்புகிறார். இந்த நிலையில் முதல் நாள் பயிற்சி முடிந்தவுடன் சி எஸ் கே வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று டேபிள் டென்னிஸ் விளையாடினர். அதன் வீடியோவை இப்பொது ரசிகர்கள் அதிக அளவில் கண்டுள்ளனர்.