புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணி அளித்த பரிசு – ரசிகர்களை வெகுவாக கவர்ந்த செயல்

0
242
Cancer Patient Jacob in Newzealand dressing room

நியூசிலாந்து அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருடன் அந்த அணியின் சீனியர் வீரர் ராஸ் டெய்லர் ஓய்வு பெற உள்ளார். அதனால் அவருக்கு சிறப்பான கடைசி தொடரை வழங்க வேண்டும் என்று நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு மிகவும் ஈடுகொடுத்து வங்கதேச அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா போன்ற சிறப்பான அணிகளே நியூசிலாந்து நாட்டில் திணறும் பொழுது வங்கதேச அணி சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அடித்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட அதிகமாக எடுத்து விளையாடி வருகிறது. மேலும் நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளார் அந்த அணியின் லாதம் தற்போது கேப்டனாக உள்ளார்.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே சிறப்பான அடித்தளம் அமைத்து சதம் விளாசினார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய நிக்கோல்ஸ் 75 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் சொரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹடி ஹாசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பிறகு விளையாடிய வங்கதேச அணிக்கு மஹம்மதுல் ஹசன், சான்டோ, மோமினுள் மற்றும் லிட்டன் தாஸ் என அனைவரும் வரிசையாக அதிரடியாக அரைசதம் கடந்து அசத்தினர். இதன் காரணமாக தற்போது நியூசிலாந்து அணியை விட வங்கதேசம் 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

வங்கதேச அணியின் ஆட்டத்தை விட ரசிகர்களை அதிகமாக கவர்ந்த விஷயம் நியூசிலாந்து அணியினரின் டிரஸ்ஸிங் ரூமில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தது தான். யார் இந்த சிறுவன் என்று பலரும் குழம்பிய நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அந்த சிறுவனின் பெயர் ஜேக்கப் என்றும் சிறு வயதிலேயே அவனுக்கு கேன்சர் இருக்கிறது என்றும் நியூசிலாந்து அணியின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒருநாள் நியூசிலாந்து அணியினருடன் டிரெஸ்ஸிங் ரூமில் அமர வைக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு அந்த சிறுவனுக்கு நல்லதொரு சிறப்பான தருணத்தை அமைத்துக் கொடுக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.