“போன வருஷமே என்கிட்ட சொல்லிட்டாங்க” – சஞ்சு சாம்சன் வெளியிட்ட புதிய தகவல்!

0
2386
Samson

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க சென்றுள்ளது. அதே சமயத்தில் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோற்று இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தற்போது தொடர் சமநிலையில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டி ஆரம்பித்து நடக்க இருக்கிறது.

முதல் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் கடைசி வரை களத்தில் நின்ற சஞ்சு சாம்சன் கடைசி ஓவர் வரை இந்திய அணியின் வெற்றியை விட்டுக் கொடுக்காமல் போராடினார். கடைசி ஓவருக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் 20 ரன்கள் விளாசி தென்னாப்பிரிக்க அணியை அச்சத்திலேயே வைத்தார். அந்தப் போட்டியில் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் இசான் கிசான் மற்றும் ஸ்ரேயா ஐயர் இருவரும் மிகச் சிறப்பாக ஆட, கடைசியில் வந்த சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்து இறுதி வரை அணி வெற்றி பெறும் வரை களத்தில் நின்றார்.

சஞ்சு சாம்சன் இயல்பாகவே புதிய பந்து பேட்ஸ்மேன். பேட்டிங்கில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விளையாடக் கூடியவர். ஆனால் இப்பொழுது பினிஷிங் ரோலில் வருகிறார். இது குறித்து அவரிடம் கேள்விகள் முன் வைக்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்துள்ள சஞ்சு சாம்சன் ” நிச்சயமாக பேட்டிங்கில் நான் வெவ்வேறு வகையான பாத்திரங்களை பயிற்சி செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் சில அணிகளில் பல பேட்டிங் கதாபாத்திரங்களில் செய்வதற்கு பயிற்சிகள் செய்து வந்திருக்கிறேன். இதற்காக நான் நேரத்தை ஒதுக்கி அனுபவித்து இதைச் செய்திருக்கிறேன் ” என்று கூறினார்.

மேலும் பேசிய சஞ்சு சாம்சன் ” கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்து பேட்டிங்கில் பினிஷிங் ரோல் செய்வதற்கு தயாராக இருக்குமாறு எனக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. உடல் ரீதியாக நான் டாப் ஆர்டர் பேட்டிங் செய்து வருகிறேன். மனரீதியாக சூழ்நிலைகளுக்கு ஏற்ப இவ்வாறு சிறப்பாக எதிர்வினை ஆற்றுவது என்றும் அதற்கு மற்றவர்கள் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள் என்பதில் இருந்து நான் விளையாட்டை நன்றாக புரிந்து கொண்டேன். கடந்த காலத்தில் அழகாக இருந்தது. நான் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டேன். எனவே இந்த விஷயத்தில் நிறைய கற்றல் உள்ளது” என்று விரிவாகக் கூறினார்.

இரண்டாவது போட்டிக்கு தயாரான விதம் குறித்து பேசிய அவர் ” நாங்கள் முதல் போட்டி முடிந்த பிறகு ஒரு பாசிட்டிவான சந்திப்பை நிகழ்த்தினோம். அதில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இடம்பெற்றன. அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் நாம் செயல் முறையில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிறைய கூறினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.