“தம்பி அர்ஷ்தீப், ஃபீல் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாம.. போய் ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணுப்பா” – தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!

0
920

2வது டி20ல் படுமோசமாக பந்துவீசிய அர்ஷதீப் சிங்கிற்கு அறிவுரை கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 206 ரன்கள் எடுத்தது.

15 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் இளம் வீரர்கள் உம்ரான் மாலிக், சிவம் மாவி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்ததால் 200 ரன்களை இலங்கை அணி எளிதாக கடந்து விட்டது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்த மூன்று இளம் வீரர்கள் சேர்த்து ஏழு நோபால்கள் மற்றும் இரண்டு ஒயிடுகள் வீசியுள்ளனர். இதுவும் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்துள்ளது.

அர்ஷதீப் சிங் 2 ஓவர்களில் ஐந்து நோபால்கள் வீசியுள்ளார் மற்றும் 37 ரன்கள் வாரி வழங்கியுள்ளார். ஹர்திக் பாண்டியாவும் போட்டி முடிந்த பிறகு அர்ஷதிப் சிங் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி கடுமையாக பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இளம் வீரர் அர்ஷதீப் சிங்கிற்கு தற்போது ஆதரவாக பேசியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். அவர் பேசுகையில்,

“அர்ஷதீப் சிங் இதற்காக வருத்தப்பட்டு கொண்டு இருக்க வேண்டாம். கட்டாயம் வருந்த வேண்டும். ஆனால் அதை நினைத்து மனம் உடைந்து விடாமல் அடுத்த போட்டிக்காக தீவிர பயிற்சியை செய்ய வேண்டும்.

டி20 உலககோப்பைக்கு பிறகு போதிய அளவில் சர்வதேச போட்டிகள் விளையாடவில்லை மற்றும் உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதால் தான் இத்தகைய தவறுகள் நடந்திருக்கிறது. இனி அதுபோல நடந்து கொள்ளாமல் சரி செய்வது மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு அழகு.” என்றார்.