தோல்வியின் கணக்கை மகேந்திர சிங் தோனியின் பெயரில் எழுதுவது நியாயமல்ல, தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளேமிங் ஆவேசம்

0
72
Stephen Fleming and MS Dhoni

இரண்டாம் பாதியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் அதன் பின்னர் தற்போது தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில், சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஸ்கே, நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

நேற்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக பேசிய மகேந்திரசிங் தோனி, முதல் இரண்டு இடங்களில் லீக் தொடரை முடிப்பது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டு கூறியிருந்தார். தற்பொழுது சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருவதால், முதல் இரண்டு இடங்களில் சென்னை அணி லீக் தொடரை முடிக்குமா என்ற கேள்வி அதன் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

- Advertisement -

தோனியின் பொறுமையான ஆட்டம்

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியில் விளையாடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் வந்த வேகத்தில் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து சென்றனர். ஒரு கட்டத்தில் அம்பத்தி ராயுடு மற்றும் மகேந்திர சிங் தோனி மட்டும் மிக நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரில் அம்பத்தி ராயுடு 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் என 55 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆனால் மறுபக்கம் மகேந்திர சிங் தோனி 27 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் வெறும் 18 ரன்களை மட்டுமே குவித்தார். ஆட்ட முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் வந்து களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்க, 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.

நேற்றைய போட்டியின் தோல்விக்கு தோனி மட்டுமே காரணமில்லை

நேற்றைய ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி மிகவும் பொறுமையாக விளையாடினார். அதன் காரணமாகவே சென்னை அணியால் மிகப்பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. சென்னை அணி நேற்று தோல்வி பெறுவதற்கு மகேந்திர சிங் தோனி தான் மிக முக்கிய காரணம் என்று சமூக வளைதளத்தில் விமர்சனங்கள் காட்டுத் தீயாக பரவ தொடங்கியது.

- Advertisement -

அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கமளித்துள்ளார். நேற்றைய போட்டியில் இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்க பெரிய அளவில் தடுமாறினார்கள். அதற்குக் காரணம், நேற்றைய ஆட்டத்தில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. நேரம் செல்ல செல்ல குறிப்பாக இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் சிரமப்பட்டார்கள்.

எனவே இதில் மகேந்திர சிங் தோனியை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்று விளக்கம் அளித்தார். நேற்று டெல்லி அணி கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். அதன் காரணமாக எங்களால் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக குவிக்க முடியாமல் போனது. இந்தக் காரணங்களின் அடிப்படையில் தான் நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், அணியில் சிறுசிறு தவறுகள் உள்ளது. கடந்த இரு போட்டிகளில் முடிவின் மூலம் இது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. அவை அனைத்தையும் சரி செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக, கடந்த இரண்டு போட்டிகளின் முடிவை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறோம். தவறுகளை திருத்திக் கொண்டு, முழு பாய்ச்சலுடன் இனி வரும் போட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளும் என்று பிளேமிங் நம்பிக்கை தெரிவித்தார்.

வருகிற எழாம் தேதி வியாழன் அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் கடைசி லீக் போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.