“உங்களால ஷாகின் அப்ரிடி பவுலிங்க கடைசி வரை புரிஞ்சுக்கவே முடியாது” – அக்தர் ரோஹித் சர்மா மீது விமர்சனம்!

0
2233
Rohit

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் மழையால் டிராவில் முடிந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை கொண்டு இருந்த போட்டி இப்படி முடிந்ததால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்!

இந்த போட்டிக்கான டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி பரிதாபமாக வெளியேறினார்.

- Advertisement -

மேலும் ஷாகின் ஷா அப்ரிடி விராட் கோலியையும் போல்ட் முறையில் வெளியேற்றினார். ரோகித் சர்மாவிற்கு நல்ல பந்து விழுந்தது. ஆனால் விராட் கோலி சாதாரண ஒரு பந்திற்கு தவறான முறையில் கணித்து விளையாடி ஆட்டம் இழந்தார்.

சமீப காலங்களில் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே அங்கு முதன்மை இடத்தில் வைக்கப்படும் பெயராக வேகப்பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி பெயர் இருக்கிறது. இடது கையில் வேகமாக அவர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே ஸ்விங் செய்வது. பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கிறது.

நேற்று ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரது பேட்டிங் பற்றி பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ” ரோகித் ஷாஹின் பந்துவீச்சை படித்து புரிந்து கொள்ளவே முடியாது என்று நான் நினைக்கிறேன். ரோகித் சர்மா இப்படி விளையாடுவதை பார்க்க நன்றாக இல்லை. அவர் இதைவிட மிகச் சிறப்பாக விளையாடும் வீரர். ரோகித்தால் இதைவிட சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். இது மிகவும் கவலையாக இருக்கிறது

- Advertisement -

மழையின் தொடர்ச்சியான குறுக்கீடுகள் வீரர்களை உள்ளே வெளியே என்று போக வர வைக்கும். இது பேட்ஸ்மேன்களின் கவனத்தை இழக்க வைக்கும். இந்தக் காரணத்தால்தான் கில் தனது விக்கெட்டை இழந்தார். அவர் தனது கவனத்தை இழந்த காரணத்தினாலே இப்படியான ஒரு ஷாட் விளையாடினார்.

ஷாகின் அப்ரிடி என்ன ஒரு ஸ்பெஷல்! அவர் என்ன ஒரு அருமையான பந்துவீச்சாளர்! அவர் என்ன செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். பந்தை முழுவதுமாக பிட்ச் செய்து உள்ளே கொண்டு வருவார். இதற்கு ரோகித் சர்மாவிடம் பதில் இல்லை. ஆனால் ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும்? அவரது விக்கட்டை பாதுகாக்க வேண்டும். கடைசியாக ஷாகினை அவர் 2022 ஆம் ஆண்டு விளையாடி இருந்தார். அவரை அடிக்கடி எதிர்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை!” என்று கூறி இருக்கிறார்!