தரமான கார் வச்சிருந்தா மட்டும் போதாது; அதை யூஸ் பண்ணனும் – இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய பிரட் லீ!

0
286

தரமான வீரரை கையில் வைத்துக் கொண்டு, அவரை உபயோகிக்காமல் வீட்டிலேயே பூட்டி வைப்பது என்ன பயன்? என இந்திய அணி நிர்வாகத்தின் மீது கடுமையாக சாடியுள்ளார் பிரட் லி.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் பும்ரா உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரரை இன்னும் அறிவிக்க முடியாமல் இந்திய அணி நிர்வாகம் திணறி வருகிறது. ஏனெனில் முகமது சமி கொரோனா தொற்று காரணமாக வெளியே இருந்தார். தனது உடல் தகுதியை நிரூபிப்பதற்கு முயற்சித்து வருகிறார். மற்றொரு ரிசர்வ் வீரர் தீபக் சகர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் போது கணக்கால் பிசகியதால் விளையாட முடியாமல் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் மாற்றுவீரரை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகதிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் முக்கியமான இளம் வீரரை சுட்டிக்காட்டி, அவரை வைத்துக் கொண்டு ஏன் வேறொரு வீரருக்கு இந்திய அணி நிர்வாகம் தேடி அலைகிறது என சாடியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் வீரப்பன் வீட்டு ஜாம்பவான் மற்றும் முன்னாள் வீரர் பிரட் லீ கூறுகையில், “உம்ரான் மாலிக் போன்று 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வீரரை இந்திய அணி நிர்வாகம் வைத்திருக்கிறது. குறிப்பாக இளம் வீரராக இருக்கிறார். அவரால் இன்னும் சில காலம் மிகச் சிறப்பாக காயம் இன்றி செயல்பட முடியும். அவரை வைத்துக் கொண்டு ஏன் வேறொரு வீரரை இந்திய அணி நிர்வாகம் தேடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய போன்ற மைதானத்தில் வேகம் என்பது பிரதானம். 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வீரரை விட, இவர் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும். எதிரணி வீரர்களால் பந்தை எதிர்கொள்ள முடியாத அளவிற்கு திணறடிக்க முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் தரமான கார் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அதை உபயோகிக்காமல் வீட்டிலேயே பூட்டி வைத்திருந்தால் என்ன பயன்? உங்களுக்கும் பயனில்லை; இந்த காரும் பழுதாகிவிடும். இதனை உணர்ந்து இந்திய அணி நிர்வாகம் செயல்பட வேண்டும்.” என்றார்.