கபில்தேவை உலகமே சபிக்கும்.. என் மகன் யுவராஜ வெச்சி எனக்கு செஞ்சதுக்கு ஜெயிச்சேன் – யோக்ராஜ் சிங் பேட்டி

0
98
Kapil

இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மகேந்திர சிங் தோனியின் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து தற்பொழுது கபில்தேவ் மீதும் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

1981 ஆம் ஆண்டு எந்தவித காரணமும் இல்லாமல் கபில்தேவ் தன்னை அணியை விட்டு நீக்கியதாகவும், பிறகு தன் மகனை வைத்து அதற்கு தான் பலி வாங்கி விட்டதாகவும், நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு சச்சரவை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -

தோனி பற்றிய குற்றச்சாட்டு

யுவராஜ் சிங் இதுவரையில் தோனி மீது எந்தவிதமான புகார்களையும் கூறியது கிடையாது. மேலும் இருவரும் நல்ல முறையிலேயே தங்கள் நட்பை இதுவரையில் பரிமாறி வருகிறார்கள். இப்படியான நிலையில் தான் தொடர்ந்து யுவராஜ் சிங் தந்தை மகேந்திர சிங் தோனி மீது பெரிய பெரிய குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

யோக்ராஜ் சிங் தான் மகேந்திர சிங் தோனியை மன்னிக்க மாட்டேன் என்றும், ஏனென்றால் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் நான்கு, ஐந்து ஆண்டுகள் இருந்ததாகவும், ஆனால் தோனிதான் அதைக் கெடுத்து விட்டதாகவும், தனக்கு தற்போது எல்லா தகவல்களும் தெரிய வந்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

- Advertisement -

கபில்தேவை பழி வாங்கினேன்

இந்த நிலையில் கபில்தேவுக்கு சரியான போட்டியாக தான் வந்து விடுவேன் என்கின்ற காரணத்தினால், தன்னை அணியை விட்டு கபில்தேவ் நீக்கி விட்டதாகவும், இதற்கு தன் மகனை வளர்த்து ஆளாக்கி பெரிய சாம்பியன் வீரராக கொண்டு வந்து பழிவாங்கி விட்டதாகவும் யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : துலிப் டிராபி 2024.. எப்போது எந்த சேனலில் பார்க்கலாம்.?.. நட்சத்திர இந்திய வீரர்களால் எகிறும் எதிர்பார்ப்பு

இதுகுறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது “நம் காலத்தின் தலைசிறந்த கேப்டன் கபில்தேவ். உலகமே உன்னை சபிக்கும் என்று நான் அவரிடத்தில் சொல்லி இருந்தேன்.தற்போது கபில் தேவிடம் அந்த ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டுமே இருக்கிறது. ஆனால் என் மகன் யுவராஜ் சிங் இடம் தற்போது 13 கோப்பைகள் இருக்கிறது. இது சம்பந்தமான விவாதம் இத்தோடு முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -