“உங்களுக்கு முன்னாடியே ஹர்திக் பாண்டியாவை எனக்கு தெரியும்” – கவாஸ்கரின் ஒப்பீட்டிற்கு ரவி சாஸ்திரி காட்டமான பதில்!

0
54

ரவி சாஸ்திரி போன்று ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்படுவார் என கவாஸ்கர் கூறியதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, முழு உடல் தகுதி பெறவில்லை. அவரால் தொடர்ச்சியாக பந்துவீச முடியாது என்று மருத்துவர்களும் ஆலோசனை கூறினார்கள்.

அதனால் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முழு பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திருப்தி அளிக்கவில்லை. இத்தனை ஆண்டு காலம் அவரை தக்க வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை வெளியேற்றிவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கு முன்பாக புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். அவர் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் ஆகவும் நியமித்தது அந்த அணியின் நிர்வாகம்.

நம்பிக்கை காப்பாற்றும் விதமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். இந்திய அணியிலும் அதன் பிறகு இன்றியமையாத வீரராக மாறிவிட்டார். ஆசிய கோப்பை தொடர் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர் என ஒதுக்க முடியாத வீரராகவும் இந்திய அணியில் மாறிவிட்டார். 1985 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர் அப்போது அணியின் ஆல்ரவுண்டராக இருந்த ரவி சாஸ்திரியுடன் ஒப்பிட்டு ஹர்திக் பாண்டியாவை பேசியுள்ளார்.

“1985 ஆம் ஆண்டு உலக நாடுகள் தொடரில் இந்திய அணி விளையாடியது. அப்போது இருந்த அணியில் ரவி சாஸ்திரி மிக முக்கிய வீரராக திகழ்ந்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார். ஆகையால் இந்திய அணி அந்த தொடரை கைப்பற்றியது. அதுபோல டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா நிச்சயம் இருப்பார். ரவி சாஸ்திரி போன்று ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர்.” என குறிப்பிட்டார்.

இதற்கு முகம் சுளிக்கும் விதமாக பதில் கொடுத்திருக்கிறார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில், “நான் எனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியாவை பற்றி பலமுறை கூறியிருக்கிறேன். இந்த பார்மட்டில் அவர்தான் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அவரைப்பற்றி நான் பதிவிட்டு இருக்கிறேன். யார் எதை பேசுவது என்றாலும், இதனை புரிந்து கொண்டு பேசுங்கள். மீண்டும் கூறுகிறேன், ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். என்றார்.