தவறான தீர்ப்புதான் ஆட்டத்தின் திருப்புமுனை! – பாபர் பரபரப்பு பேச்சு வீடியோ இணைப்பு!

0
363
Babar

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று முடிவடைந்தது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்களை குவித்தது.அதிகபட்சமாக பென் டக்கெட் 63 ரன்களும் ஒல்லி போப் 60 60 ரன்களும் எடுத்தனர்.பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அஹமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 202 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது கேப்டன் பாபர் அசாம்75 ரன்களையும் சவுத் ஷகீல் 63 ரன்களையும் சேர்ந்தனர் இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

79 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 275 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது ஹாரி ப்ரூக்ஸ் அபாரமாக ஆடி108 ரன்களை குவித்தார் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அப்ரார் அஹமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அப்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் மற்றும் முஹம்மது நவாஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றி பெரும் தருவாயில் இருந்த பொது நவாஸ் ஆட்டம் இழந்தார் அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷகீல் 94 ரண்களில் மார்க் வுட் பந்து வீச்சில் விக்கட் கீப்பர் போப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் இந்த கேட்ச் மூன்றாம் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டு சர்ச்சை ஆனது இதன் பின் எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து ஆடாததால் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அஸாம் “சவுத் ஷகீலின் விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்பு முனை என்று குறிப்பிட்ட அவர் அந்த முடிவு மூன்றாம் நடுவரின் தவறு” என்று தெரிவித்தார் ,

மேலும் இது குறித்து பேசிய அவர் “பந்து விக்கெட் கீப்பரின் கையுறைக்குள் தஞ்சம் புகுமுன் தரையில்பட்டது தொலைக்காட்சி ரீப்பிலேகளில் தெளிவாக தெரிந்ததாக சுட்டி காட்டிய பாபர் இதனால் வருத்தமென்றாலும் நடுவரின் தீர்ப்பை மதிப்பதாக” கூறி முடித்தார் .

- Advertisement -