கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

WPL 2026 ஏலத்தில் கவனம் ஈர்த்த 16 வயது வீராங்கனை.. டாப் 3 விலை போன வீராங்கனைகள்

வெறும் 16 வயதிலேயே ஹரியானாவைச் சேர்ந்த தீயா யாதவை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் WPL 2026 ஏலத்தில் அதிகம் பேசப்படும் இளம் வீராங்கனைகளில் ஒருவராக மாறியுள்ளார். 2023ல் நடந்த அண்டர் 15 மகளிர் ஒருநாள் டிராபியில் தீயாவின் பயணம் அனைவரின் கவனத்தையும் நோக்கி திரும்பியது.

- Advertisement -

அந்தத் தொடரில் 578 ரன்கள் குவித்தார். அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இது அந்த வயதில் அரிதினும் அரிதான சாதனையாக பார்க்கப்பட்டது. இதனால் 2024 ஜனவரியிலேயே ஹரியானா அண்டர் 23 மற்றும் சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

யார் இந்த தீயா?

2025-26 உள்நாட்டு சீசனில் தீயா பேட்டிங்கில் பறக்க விட்டார்.
நம்பர் 3இல் இறங்கி, ஷஃபாலி வர்மாவுடன் இணைந்து ஆடியது உடனடியாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஷஃபாலியின் ஆரம்பகால ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் தீயா பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

சீனியர் மகளிர் டி20 டிராபியில் 8 இன்னிங்ஸ்களில் 298 ரன்கள் அடித்தார்.சராசரி 59.60, ஸ்ட்ரைக் ரேட் 127.89, மூன்று அரைசதங்கள் அடங்கும். ஹரியானாவின் இன்னிங்ஸை இண்டர் ஜோனல் டிராபியில் நார்த் சோன் அணியில் ஓப்பனிங் இறங்கிய தீயா, ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 150 என 151 ரன்கள் சேர்த்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

டாப் 3 வீராங்கனை:

நார்த் சோன் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றினார். தீயா யாதவை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.10 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி ஆடவர் கிரிக்கெட்டில் பட்டையை கிளப்புவது போல் தீயாவும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உயிரை கொடுத்து விளையாடினேன்.. ஐபிஎல் செயல்பாடு பார்த்து எடுக்கப்படும் முடிவு.. ராபின் உத்தப்பா தாக்கு

மகளிர் ஏலத்தை பொருத்தவரை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவை 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து உபி அணி வாங்கியது. இதைப் போன்று நியூசிலாந்து வீராங்கனை அமீலா கெரை மூன்று கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணியும், இந்திய வீராங்கனை சீக்கா பாண்டேவை 2 கோடி 40 லட்சம் ரூபாய் கொடுத்து உபி அணியும் வாங்கியது.

- Advertisement -
Published by