“உலககோப்பை பைனல் பிட்ச்.. முட்டாள்தனமான முடிவு.. யார் ஐடியா கொடுத்தது?” – அம்பதி ராயுடு அதிரடி தாக்கு!

0
503
Ambati

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது இப்பொழுது வரை பெரிய மனக்கயத்தை இந்திய தரப்பில் உண்டாக்கி வருகிறது.

இறுதிப் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் தற்பொழுது வரை பெரிய சர்ச்சையான விஷயமாக இருக்கிறது. ஆடுகளம் இறுதிப் போட்டிக்கான அளவில் இல்லை. மிகவும் மெதுவான ஆடுகளமாக இருந்தது.

- Advertisement -

மேலும் இப்படியான ஆடுகளத்தில் இரவில் இரண்டாம் பகுதியில் பனி வந்ததும் பேட்டிங் செய்வதற்கு எளிதாக மாறிவிடும். இந்த காரணத்தினால் இது இறுதிப் போட்டிக்கு சரியான ஒரு ஆடுகளம் கிடையாது. ஆடுகளத்தின் காரணமாகவே இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.

இப்படியான ஒரு ஆடுகளத்தை இறுதிப் போட்டிக்கு யார் தேர்வு செய்தது என்பது குறித்து தற்பொழுது வரை எந்த விஷயங்களும் வெளியில் வரவில்லை. ஏனென்றால் பல கோடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக் கோப்பையில் மண்ணள்ளி போட்ட விஷயமாக அது அமைந்திருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறும் பொழுது “இறுதிப் போட்டி ஆடுகளம் மிகவும் மெதுவாகவும் மந்தமாகவும் இருந்தது. அது யாருடைய யோசனை என்று எனக்குத் தெரியவில்லை.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி பலமாக இருந்த காரணத்தினால் சாதாரண ஆடுகளமே போதுமானது. நாங்கள் சிறப்பாக எதுவும் செய்திருக்க தேவையில்லை. நல்ல ஒரு ஆடு களமாக இருந்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அப்படி அமையவில்லை.

யாராவது இதை யோசித்தார்களா இல்லை வேண்டுமென்றே செய்தார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதை யாராவது வேண்டுமென்றே செய்திருந்தால் அது முட்டாள்தனம். ஆனால் இப்படி வேண்டுமென்றே யாரும் செய்திருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

சில நேரங்களில் இப்படி நடக்கும். ஆனால் உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணிகளில் இந்த அணியே சிறந்த அணி என்று நான் நினைக்கிறேன். திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணி சிறந்ததாக இருந்தது. ஆனால் செயல்பாட்டு அளவில் இந்த முறை அமைந்த அணியே சிறந்தது!” என்று கூறியிருக்கிறார்!