உலகக் கோப்பை வேணும்னா இதெல்லாம் செய்ங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

0
1829
Ashwin

50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. தற்பொழுது இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க தகுதி உள்ள அனைத்து அணிகளும், அதிகப்படியான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று தங்களை தயார் செய்து வருகின்றன!

இந்த வகையில் இந்திய அணி இந்த மாதம் இலங்கை அணி உடன் விளையாடிய முடித்து அடுத்து நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை உள்நாட்டில் விளையாடி வருகிறது.

தற்பொழுது இந்தியாவில் உலகக்கோப்பை நடக்கும் அக்டோபர் நவம்பர் மாதங்கள் மழைக்காலம் ஆகும். மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கும். போட்டி மதியம் துவங்கி இரவு முடிவதால் இரண்டாவது பகுதியில் பந்து வீசும் அணிக்கு பனிப்பொழிவு பந்துவீச்சில் சிரமங்களை உண்டாக்கும். இதனால் டாஸ் வெல்கின்ற அணி ஆட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சில விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது ” மாலை வந்து பனி வந்து விட்டால் பந்து இளகி விடுகிறது. இதற்குப் பிறகு பந்து வீசுவது கடினம். ஆனால் நடுவர்கள் இப்படியான நேரத்தில் பந்துகளை மாற்ற தயங்குகிறார்கள். பந்துகளை மாற்றுவது என்பது எந்த அணிக்கும் சாதகமாக இருக்கின்ற விஷயம் கிடையாது. நடுவர்கள் நடுநிலையாக இருந்து மாற்ற வேண்டும். ஆனால் இது சாத்திய மற்றது” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” எங்கள் சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் பந்து வீசுகிறார் அவர் நல்ல பந்தை வீசுகிறார். ஆனால் பேட்ஸ்மேன் பேட்டில் பட்டு வந்து சிக்ஸருக்கு செல்கிறது. காரணம் 70 மீட்டர் ஸிக்சருக்கும் 55 மீட்டர் சிக்ஸருக்கும் வித்தியாசம் இருக்கிறது. குறுகிய பவுண்டரி தூரங்களால் இது நடக்கிறது. இப்போது அந்தப் பந்துவீச்சாளரின் மனநிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் இப்பொழுது வீசிய அதே நல்ல பந்தை வீச வேண்டுமா இல்லை அதற்கு மாற்றாக வேறொரு பந்தை வீச வேண்டுமா? ” என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்!