ஆசியக்கோப்பைக்கு பாகிஸ்தான் வர மாட்டீங்களா? அப்ப அடுத்த வருஷம் உலகக்கோப்பையை வேற எங்கேயாவது நடத்துங்க – பாகிஸ்தான் வீரர் காட்டம்!

0
536
BCCI

இந்தியா பாகிஸ்தான் அணிகள் உலகின் எந்த நாட்டில் மோதிக் கொண்டாலும் அந்த நாட்டின் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும். மேலும் அந்த போட்டி குறித்தான எதிர்பார்ப்பும் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அளவில் இருக்கும். அந்த போட்டியை ஒட்டி நடைபெறும் வணிகமும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.

இதற்கான முக்கியக் காரணம் உலகெங்கும் இந்திய ரசிகர்கள் பரவி இருக்கிறார்கள் என்பது மட்டும் கிடையாது. இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் அரசியல் மற்றும் வரலாறு அப்படியானது!

- Advertisement -

சில காலங்களாகச் சில அரசியல் பிரச்சனைகளால் இருநாடுகளும் இரு நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஐசிசி நடத்தும் போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை போட்டிகள் போன்றவற்றில் ஒரு பொதுவான இடத்தில் இரண்டு அணிகளும் மோதின.

இந்த நிலையில் அடுத்து நடக்கும் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் செல்லும் என்ற பேச்சு பரவியிருந்தது. ஆனால் இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லாது, ஒரு பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பை நடந்தால் அதில் இந்தியஅணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் சில நாட்களாக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் செல்வதும் பாகிஸ்தான் இந்தியா வருவதும் மீண்டும் இயல்பாக நடக்க ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் நம்பி இருந்ததில் இப்பொழுது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் காட்டமாக ட்விட் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அதில் சயித் அன்வர்
” அனைத்து கிரிக்கெட் அணிகளும் அனைத்து அணிகளின் வீரர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வரும்பொழுது பிசிசிஐ-க்கு என்ன பிரச்சனை? பிசிசிஐ பொதுவான ஒரு இடத்தில் விளையாட நினைத்தால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டித் தொடரிலும், பாகிஸ்தான் அணியோடு மோதுவதாக இருந்தால் பொதுவான ஒரு இடத்தில் மோதுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்?” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்!