ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் உலகக் கோப்பை வென்ற 10 வீரர்கள்

0
1663

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி உலகக்கோப்பை வெல்வது என்பது சாமண்யம் அல்ல.அதற்குக் கடுமையான பயிற்சியும் குழுவாக செயல்படும் திறனும் தேவை.15 வீரர்கள் அடங்கிய ஒரு அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் இருந்தால் மட்டுமே உலகக்கோப்பையை முத்தமிட முடியும்.எனினும்,எல்லா வீரர்களுக்கும் இது பொருந்தாது.

அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் உலகக்கோப்பை வென்ற வீரர்களும் உள்ளனர்.அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

- Advertisement -

10.பிராட் ஹாடின் (2007)

2007ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் பிராட் ஹாடினும் இடம் பெற்றிருந்தார்.அந்த வருடம் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட் அற்புதமாக செயல்பட்டார்.அதனால் ஹாடினிற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

மேத்யூ ஹய்டன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க்,கில்கிறிஸ்ட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பிக்க கிளென் மெக்கராத்,ஷான் டெய்ட்,பிராட் ஹாட்ஜ் ஆகியோர் பௌலிங்கில் சிறப்பிக்க 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்றது.

- Advertisement -

9.மர்வன் அட்டப்பட்டு (1996)

இலங்கை வீரர் மர்வன் அட்டப்பட்டு,தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தும் சர்வதேச அணிக்காக 13,000 ரன்கள் அடித்துள்ளார்.1990ஆம் ஆண்டே இவர் இலங்கை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து சிறப்பாக விளையாடாத காரணத்தினால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்பு,முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 1996 ஆண்டு தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.அவ்வருடம் ஜெயசூரிய,ரணதுங்கா,டி செல்வா போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றிந்ததால் இவருக்கு வாய்ப்புக் கிடைகவில்லை.

8.லியாம் டாவ்சன் (2019)

சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு கோப்பையை உயரத்த லியாம் டாவ்சன் எதுவும் பங்களிக்கவில்லை.

ஸ்டோக்ஸ்,ரூட், பட்லர் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்ததால் இவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும்,முதல் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் லியாம் டாவ்சனின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

7.உபுல் சந்தனா (1996)

மர்வான் அட்டப்பட்டுவைப் போல இவரும் 1996ஆம் ஆண்டு இலங்கை அணியில் இருந்தார்.சுழற்பந்து பிரிவில் முத்தையா முரளிதரன் பிரமாதமாக பந்துவீசினார்.

அக்காரணத்தால் உபுல் சந்தனாவிற்கு ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்கவில்லை.ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியில் ஒரு உறுப்பினராக இருந்த பெருமை உண்டு.

6.மிட்செல் ஜான்சன் (2007)

இந்தப் பட்டியலில் இவரது பெயர் இருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.2007ஆம் ஆண்டு மெக்கராத்,டெய்ட் போன்ற பௌலேர்கள் அணியில் இருந்தனர்.அதனால் ஜான்சனை அணியில் ஆட வைக்க ஆஸ்திரேலிய வாரியம் விரும்பவில்லை.

பின்வரும் காலங்களில்,தான் மிகச்சிறந்த பவுலர் என்பதை மிட்செல் ஜான்சன் நிரூபித்தார்.ஆஸ்திரேலிய அணி 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல ஒரு முக்கிய அங்கமாக இவர் திகழ்ந்தார்.

5.சுனில் வால்சன் (1983)

1983இல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வென்றதன் மூலம் இந்திய நாட்டில் கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து.1983ஆம் வருடம் இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பை வென்றது.ஒட்டுமொத்த இந்திய நாடே ஆனந்தக் கடலில் மூழ்கியது.

ஆனால் சுனில் வால்சனிற்கு அந்த வெற்றி அவ்வளவு திருப்தியைத் தரவில்லை.ஏனென்றால் இவரைத் தவிர இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்கேற்றனர்.வால்சன் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

4.டாம் கர்ரன் (2019)

லியாம் டாவ்சனைப் போல் இவரும் 2019திற்கனா இங்கிலாந்து அணியில் இருந்தார்.வளர்ந்து வரும் நட்சத்திரமாக டாம் கர்ரன் கருதப்பட்டார்.முன் அனுபவம் இல்லாத காரணத்தால் இவரை பிளேயிங் 11இல் சேர்க்கவில்லை.

இங்கிலாந்து அணி எப்போதும் ஜோப்ரா ஆர்ச்சரின் மின்னல் வேகத்தை மட்டுமே நம்பினர்.அவரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நம்பிக்கைக்கேற்ப சூப்பர் ஓவரில் வெற்றியைத் தேடித் தந்தார்.

3.நாதன் பிரெக்கன் (2003)

2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஜேசன் கில்லெப்சே காயம் காரணமாக,தொடரின் மத்தியிலேயே விலகினார்.அவருக்குப் பதிலாக மாற்று வீரராக நாதன் பிரெக்கன் அணியில் சேர்க்கப்பட்டார்.

என்னதான் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்தாலும் இவரால் ஒரு போட்டியில் கூட பங்கேற்க இயலவில்லை.ஏற்கனவே அனுபவம் மிகுந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்ததால் இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.நாதன் ஹெளரிட்ஸ் (2003)

ஷேன் வார்னே,கிரிக்கெட் விதிகளுக்கு மீறிய மருந்துகளை உபயோகப்படுத்தியதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவரை அணியில் இருந்து நீக்கியது.மாற்று வீரராக நாதன் ஹெளரிட்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாதன் பிரெக்கனைப் போல இவரும் தொடரின் மத்திலேயே அணியில் இணைந்தார்.இவரைப் பிளேயிங் 11இல் சேர்க்காமலயே 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை முத்தமிட்டது.

1.காலிஸ் கிங் (1975)

1975ஆம் வருடம் முதல் ஐசிசி உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றது.மேற்கிந்திய தீவுகள் அந்த வருடம் உலகக்கோப்பையைத் தட்டி சென்றது.அந்த அணியில் காலிஸ் கிங் இடம் பெற்று இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகளில் விளையாடியது.அதில் ஒன்றில் கூட காலிஸ் கிங் பங்கேற்கவில்லை.1979ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரில் கிங்கிற்கு வாய்ப்புக் கிடைத்தது.கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்தி 66 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.