“உலக கோப்பை ஜெயிச்சதும் சச்சின தூக்கி சுமந்த மாதிரி இப்ப இவருக்கு செய்யனும்!” – சேவாக் வித்தியாசமான விருப்பம்!

0
3909
Sachin

இந்திய கிரிக்கெட்டில் உலகக் கோப்பைகளை வென்ற கேப்டன்களை விட, எப்பொழுதும் முதலிடத்தில் இருக்கும் பெயராக சச்சின் டெண்டுல்கர் பெயர் இருக்கும்.

தன்னுடைய 16 வது வயதில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து, அங்கிருந்து 24 வருடங்கள் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்தவர்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரை ஒரு பேட்ஸ்மேன், ஒரு கிரிக்கெட் வீரர் என்கின்ற அளவில் மட்டுமே நிறுத்தி விட முடியாது. அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வளர்ச்சிக்காகவும் யோசித்த ஒரு முழுமையான தொலைநோக்குப் பார்வை கொண்ட வீரராக இருந்தார்.

அதே சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி இந்தியாவின் கௌரவம் மிக்க அடையாளமாகவும் உலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டார். அவர் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார்.

இதன் காரணமாகத்தான் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பாரத ரத்னா என்னும் இந்தியாவின் உயரிய விருது கொடுக்கப்பட்டது. பாரத ரத்னா விருது விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படக் கூடியது கிடையாது. ஆனால் சச்சினுக்காக மாற்றிக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்தியாவின் மிக முக்கியமான மனிதராக அவர் இருக்கிறார்.

- Advertisement -

சச்சின் மொத்தமாக ஆறு உலகக் கோப்பை தொடர்களை விளையாடி இருக்கிறார். இதில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு ஆறாவது உலகக்கோப்பை தொடரில்தான் அவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தவராக இருந்தார்.

கிரிக்கெட்டிலும் பொதுவாகவும் அவருடைய பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய வீரர்கள் தங்களின் தோள் மீது சச்சினை சுமந்து சென்று கௌரவப்படுத்தினார்கள். இதேபோல் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் தற்போது விளையாடும் ஒரு வீரரையும் அப்படி செய்ய வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது ” 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விராட் கோலி ஒரு சதுன் கூட அடிக்கவில்லை. ஆனால் இந்த முறை அவர் சதம் அடிப்பார். நிறைய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். இந்த உலகக் கோப்பையில் வீரர்கள் அவரை தோள் மீது சுமந்து கொண்டு சுற்றிவர வேண்டும்!” என்று விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!