“ருதுராஜ் அஷ்வின் உள்ளே.. இது சாதாரணம் கிடையாது பெரிய சவால்!” – கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறார்!

0
1074
ICT

ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பைக்கு முன்பாகவே இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுவாக இந்த மைதானம் இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக இதுவரை இருந்ததில்லை.

- Advertisement -

இந்திய அணி உலக கோப்பைக்கு செல்வதற்கு முன்பாக எட்டாவது இடத்திற்கான சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் யார்? என்பது குறித்து தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறது.

இந்த இடத்திற்கு அக்சர் படையல் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என மூவர் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தினால் அதைப் பரிசோதிக்க இந்த தொடரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளும்.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டால், அவர்கள் இதற்கு மேல்தான் தங்களது முழுமையான அணியைக் கட்டமைத்தாக வேண்டும். எனவே இந்தத் தொடர் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கே முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இன்று இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக ருதுராஜ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் அஸ்வின் இடம் பெற்று இருக்கிறார். திலக் வர்மா மற்றும் சிராஜ் இருவரும் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் கூறும் பொழுது ” நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். வரலாற்று ரீதியாக இங்கு சேஸ் செய்ய இது நல்ல மைதானம். நான் டிக் செய்ய வேண்டிய சில பெட்டிகள் இன்னும் இருக்கின்றன. நான் டிக் செய்த பெட்டிகள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியா அணி தரமான அணி. இது மேலும் ஒரு புதிய சவால் மற்றும் எப்போதும் பெரிய சவால்!” என்று கூறியிருக்கிறார்!

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது ” திரும்பி வருவது மகிழ்ச்சி. ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் இன்னும் தயாராக இல்லை. டாஸ் வென்று இருந்தால் நானும் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இது குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை. இங்கே நன்றாக, வெயிலாக இருக்கிறது. வார்னர் மற்றும் மார்ஸ் ஆட்டத்தை துவங்குவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!