“உலகக் கோப்பை போட்டிகளுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வெற்றி வெகு தொலைவில் இருக்கிறது” – இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கடும் தாக்கு!

0
104

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. உலகக் கோப்பை இந்தியாவில் தொடங்குவதற்கு இன்னும் ஆறு மாதங்களை உள்ள நிலையில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது . அதற்கேற்றார் போல் இந்தியாவும் உலக அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணியாக வளம் வந்தது. ஆனால் இந்த 12 வருடங்களில் 2013 ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக் பிறகு இந்திய அணியால் எந்த ஒரு ஐசிசி போட்டிகளிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பதால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெற்று ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது அதே நேரத்தில் இந்திய அணியின் செயல்பாடு சில போட்டிகளில் பார்க்கும்போது மிகவும் ஏமாற்றமாகவே இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியுடன் இந்திய அணியின் தோல்வி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் விமர்சகர்மான மைக்கேல் வாகன். இது குறித்து ஒரு தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியை பதிவிட்டு இருக்கும் அவர் இன்னும் உலகக்கோப்பைக்கு ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னும் பின்தங்கியே இருக்கிறது என கடுமையாக சாடி இருக்கிறார் .

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணி வெள்ளைப் பூண்டு கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. அவர்கள் 2021 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியிலும் தோல்வி அடைந்தார்கள். 2022 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியிலும் அரை இறுதியில் தோல்வியை தழுவினார்கள். தற்போதைய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக நான் கருதுகிறேன்” என மைக்கல் வாகன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய வாகன் ” இந்திய அணி மிகவும் பின்தங்கி இருக்கிறது. அவர்களிடம் நல்ல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆயினும் அவர்கள் உலகக்கோப்பையை வெல்வதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் ” என தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டு உலகக் கோப்பையும் இங்கிலாந்து அணி தான் கைப்பற்றும் எனக் கூறியவர் இங்கிலாந்து அணியில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்களோடு உலகத் தரம் வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர் . மேலும் சுழற் பந்து வீச்சிக்கு எதிராக திறமையாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்களும் உள்ளனர். இங்கிலாந்து அணி எல்லா காலச் சூழ்நிலைகளிலும் திறமையாக ஆடக்கூடிய ஒரு அணி எனவே இந்த முறையும் இங்கிலாந்து அணி தான் உலக கோப்பையை வெல்லும் என தெரிவித்திருக்கிறார்.