இலங்கையுடன் நியூசிலாந்து அசத்தல் வெற்றி; அரை இறுதிக்கு தகுதி பெறுகிறதா?!

0
4844
Newzealand

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இன்று சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த நியூசிலாந்து அணி 15 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது.

- Advertisement -

இதற்கடுத்து இணைந்த பிலிப்ஸ் மற்றும் மிச்சல் இருவரும் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மிச்சல் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் 64 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸ்ர்கள் உடன் 104 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்தது.

இந்த இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு எல்லாமே அதிர்ச்சியாக மட்டும் தான் இருந்தது. முதல் ஐந்து விக்கெட்டுகளை 25 ரன்களுக்குள் இலங்கை அணி இழந்துவிட்டது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் சனகா 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.2 ஓவரில் இலங்கைய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் ஒரு டிரா உடன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது . நியூசிலாந்து அணி தரப்பில் டிரன்ட் போல்ட் நான்கு ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

நியூசிலாந்த அணி தற்போது மூன்று ஆட்டங்களில் ஐந்து புள்ளிகளை எடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டங்களில் தலா மூன்று புள்ளிகள் எடுத்து இருக்கின்றன. நியூசிலாந்து தனது கடைசி இரு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் ஒரு போட்டியை வென்றால் கூட நியூசிலாந்து அணி 7 புள்ளிகளை பெற்று விடும். மேலும் தற்போது நியூசிலாந்து அணியின் ரன் ரேட் +3க்கு மேல் இருக்கிறது. இந்த காரணத்தால் நியூசிலாந்து அணி தற்போது ஏறக்குறைய அரை இறுதி போட்டிக்கு வந்துவிட்டது என்றே கூறலாம்!