கோல்ப் விளையாடிய உலகக்கோப்பை வெற்றி கேப்டன்கள்; வீடியோ இணைப்பு!

0
153
MSD

இந்திய கிரிக்கெட் அணிக்காக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த இரண்டு கேப்டன்கள் வித்தியாசமான ஒரு விளையாட்டுக் களத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அவர்கள் ; 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக 50 ஓவர் உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த கபில்தேவ் மற்றும் 2007 20 ஓவர் உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த மகேந்திர சிங் தோனி.

- Advertisement -

கபில்தேவ் கிரான்ட் தோர்ன்டன் இன்விடேஷனல் கோல்ப் தொடர் குர்கிராமில் நடைபெற்று வருகிறது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். இந்த கோல்ப் தொடருக்கு சிறப்பு விருந்தினராக கபில்தேவால் மகேந்திர சிங் தோனி அழைக்கப்பட்டார். கபில்தேவும் கலந்து கொண்டார்.

இதில் இருவரும் கௌரவ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக கோல்ப் விளையாடினார்கள். இவர்கள் விளையாடுவதை மகேந்திர சிங் தோனியின் சமூகவலைதள ரசிகர் பக்கங்களில் பதிவேற்றப்பட்டு இருந்தது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவேன் என்று தோனி ஏற்கனவே கூறியிருந்தார். மேலும் சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறி இருந்தபொழுது, ஒருவேளை அவர் ஓய்வு பெறுகிறாரா இன்று அவரது ரசிகர்கள் மிகவும் பயந்து இருந்தனர். ஆனால் அவர் ஓரியோ பிஸ்கட் நிறுவனத்திற்கு விளம்பரத்திற்காக வந்தார். இதிலிருந்து அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக சென்னையில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களை பெரிய அளவில் மகிழ்ச்சிப்படுத்தும் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் என்பதை தாண்டி, டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அது இந்திய அளவில் பெரிய செய்திதான்!

- Advertisement -