பர்ப்பில் நிற தொப்பியை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வதுதான் முக்கியமான விஷயம் – கொக்கரிக்கும் யுஸ்வேந்திர சஹால்

0
49

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்று போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கின்றன.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்பின் பந்து வீச்சாளர் சஹால் முதல் போட்டியில் இருந்து தற்போது வரை மிக சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஒரே போட்டியில் ஹாட்ரிக் மற்றும் 5 விக்கெட் ஹால் என அசத்தி வருகிறார்.

தற்பொழுது வரை 26 விக்கெட்டுகளை கைப்பற்றி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக முதலிடத்தில் இருக்கிறார். ஒரு ஐபிஎல் சீசனில் ஸ்பின் பந்து வீச்சாளர் மத்தியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக இம்ரான் தாஹிர் இருக்கிறார்.அதை இந்த ஆண்டு சஹால் முறியடிக்க அதிக வாய்ப்பு உண்டு.

- Advertisement -

கோப்பையை வெல்வது மிகவும் முக்கியம்

இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட பொழுது அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை கைப்பற்றுவது சந்தோஷமான விஷயம்தான். இருப்பினும் இறுதியில் கோப்பையை வெல்வதுதான் மிக மிக முக்கியமான விஷயம்.கவனத்தை நிலைநாட்டி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் அதை நான் சரியான திட்டமிடலுடன் செய்து வருகிறேன்.

முதல் இரண்டு இடத்தில் லீக் தொடரை முடிக்க ஆசைப்பட்டோம் அது நடந்து விட்டது. தற்பொழுது அடுத்தபடியாக பிளே ஆப் சுற்றில் சிறப்பாக விளையாடுவதே என்னுடைய நோக்கம். எங்களுடைய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் நிறைய அனுபவம் வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

உலக கோப்பை தொடர் மற்றும் நாக்-அவுட் சுற்றுப் போட்டிகள் என நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளதால் அவர்களிடத்தில் எந்தவித நெருக்கடியும் இருக்க வாய்ப்பில்லை. நாங்கள் திட்டமிட்டபடி ஒவ்வொரு போட்டியிலும் இந்த தொடர் முழுக்க என்ன செய்தோமோ அதையே மீண்டும் நல்ல விதத்தில் செய்ய விரும்புகிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் முதல் தகுதி சுற்று

முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் பட்லர் அதிகபட்சமாக 89 ரன்கள் குவித்துள்ளார். தற்பொழுது குஜராத் அணி 9 ஓவர்களில் 79 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.