“2023 உலகக்கோப்பை இந்திய அணியில் உங்களுக்கு இடம் கிடைக்குமா? ” – இஷான் பளிச் பதில்!

0
616
Ishankishan

ஒரே போட்டியின் மூலம் ‘ ஸ்டார்’ ஆகி இருக்கிறார்  இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்’ ‘இசான் கிசான்’ . இவர் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  அதிவேக இரட்டை சதத்தை பதிவு செய்தார் .. 131 பந்துகளில் 210 ரன்கள்  குவித்த இவர்  24 ‘பவுண்டரி’கள் மற்றும் ’10 சிக்ஸர்’ களை விலாசினார் .

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா  காயம் காரணமாக அணியில் இடம் பெறாத நிலையில்  அவருக்கு பதிலாக துவக்க வீரராக களம் இறங்கிய  இசான் கிசான்,  தனக்கு கிடைத்த வாய்ப்பை  அபாரமாக பயன்படுத்தி  இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் இதனால் இவர் உலக கோப்பை காண இந்திய அணியில் இடம் பெறுவார்” என்று  எதிர்பார்ப்பு கூடியுள்ளது .

கடந்த ஒரு வருடங்களாகவே அணியில் இடம் பெற்று வரும் இசான் கிசான், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் முதலே  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் . கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்  ஏழு ரன்களில்  தனது முதல் சதத்தை தவறவிட்ட கிஷான். நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அதற்கும் சேர்த்து  இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் .

நேற்று போட்டிக்கு பின் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்  உலக கோப்பை அணியில் தான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து பேசினார் . முதல் இரண்டு போட்டிகளில்  வாய்ப்பு வழங்கப்படாதது பற்றிய கேள்விக்கு “ஒரு இளம் வீரராக  நமக்கான வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும்,  நமக்கான வாய்ப்பு கிடைக்கும் தருணத்தில்  அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணியில் இருக்கும் மூத்த வீரர்களுடன்  பயிற்சியில் ஈடுபடுவது  நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கும்” என்று கூறினார் .

எந்த ‘பேட்டிங் பொசிஷனி’ல் ஆடவரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த   இசான் கிசான் “எல்லா வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் ‘பேட்டிங் பொசிஷனை’  சரியாக பயன்படுத்திக் கொண்டு  ஆடுகிறார்கள். ஒரு இளம் வீரராக அணி எந்த இடத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறதோ, அதில் திறமையாக செயல்பட  விரும்புகிறேன். சர்வதேச அளவில் ஆடும்போது  நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு இந்த இடம்தான் வேண்டும் என்று  ‘டிமாண்ட்’ வைக்க முடியாது.  இன்று உலகில் சிறந்த  ‘பேட்ஸ்மேன்’களாக இருக்கும் எல்லோரும் இதேபோன்று ஆடி  தங்களது திறமையை நிரூபித்தவர்கள் தான்” என்று கூறினார் .

உலகக்கோப்பை அணியில் நீங்கள் இடம் பெறுவீர்களா?என்று கேள்விக்கு  பதில் அளித்த  இஷான் கிஷான்  “உண்மையாகவே நான் இது போன்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை.எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி  இந்திய அணிக்காக  என்னுடைய சிறப்பான ஆட்டத்தை  ஒவ்வொரு போட்டியிலும்  வெளிப்படுத்த விரும்புகிறேன்.தற்போது  இரட்டை சதம்  அடித்துள்ளேன்,  அதனால் யாருக்கு தெரியும் அணியில இடம் பெற்றாலும் இடம் பெறலாம்”என்று  நகைச்சுவையுடன் கூறி முடித்தார்.