விராட் கோலி ரோஹித் சர்மா அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறார்களா?

0
2310
ICT

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் அடிலெய்டு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து மோதிய இந்திய அணி 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியிருக்கிறது!

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இந்த ஆட்டத்திலும் ஏமாற்றினார்கள். இதனால் இந்திய அணிக்கு வழக்கம் போல் நெருக்கடி உருவாக விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி அணியை மீட்டார்கள்.

- Advertisement -

ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது செயல்பாட்டில் கோட்டை விட்டார்கள். தேவையில்லாமல் அழுத்தத்தில் விழுந்து பந்துகளை சரியான இடங்களில் வீசாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரண்களை வாரி கொடுத்தார்கள்.

மேலும் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்களின் ஆட்டமும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த இரண்டும் ஒரு புள்ளியில் சேர்ந்த பொழுது இந்திய அணிக்கு பத்து விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வந்தது!

இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிக்கையாளர்களின் சிலர் கடினமான கேள்விகளுக்கு வெளிப்படையான பதில்களை கூறினார்.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா விராட் கோலி தினேஷ் கார்த்திக் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது சமி ஆகியோரின் டி20 எதிர்காலம் என்னவென்று முன்வைக்கப்பட்டது. நிருபர் மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கு இடையேயான உரையாடலை கீழே காண்போம்!

நிருபர் ; இந்த சமயத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு டி20 அணி நியூசிலாந்து செல்கிறது. இது ஒரு சுழற்சி முடிந்து விட்டது. அடுத்த பிரதிபலிப்பு பற்றி நீங்கள் சொன்னீர்கள். அடுத்த இரண்டு வருடங்களில் ரோகித் சர்மா விராட் கோலி அஸ்வின் புவனேஸ்வர் குமார் முகமது சமி இவர்களின் கிரிக்கெட் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

ராகுல் டிராவிட் ; ஒரு அரை இறுதி ஆட்டத்தின் தோல்விக்கு பிறகு இதை பேசுவது மிகவும் சீக்கிரமாகும். இவர்கள் எங்களுக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அவர்கள் இங்கே மிகவும் தரமான வீரர்கள். இது பற்றி பேசவும் சிந்திக்கவும் இப்போது சரியான நேரம் இல்லை. அடுத்த உலக கோப்பைக்கு தயாராக எங்களிடம் போதுமான நேரம் போதுமான போட்டிகள் உள்ளன!