விராட் கோலி இனி டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவாரா? – ராகுல் டிராவிட் நேரடியான பதில்!

0
1669
Viratkohli

இன்று ஐசிசி ஆடவர்களுக்கான டி20 அணியில் விராட் கோலிக்கு இடம் அளித்து அறிவித்து இருக்கிறது. ஆனால் விராட் கோலி டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது இந்திய டி20 அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் கில், இஷான், ராகுல் திரிபாதி இந்த மூன்று புதிய பேட்ஸ்மேன்களோடு இலங்கை தொடருக்கு விளையாடியது. தற்பொழுது நியூசிலாந்து டி20 தொடரிலும் விளையாட இருக்கிறது!

இனி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய டி20 அணியில் இடம் பெறுவார்களா மாட்டார்களா என்பது பற்றிய சந்தேகம் வெகுவாக பலரது மத்தியிலும் இருக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்!

ராகுல் டிராவிட் கூறும்பொழுது “குறிப்பிட்ட காலகட்டங்களில் நாம் சில வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாங்கள் தற்போது முன்னுரிமை கொடுக்க எங்களிடம் பார்டர் கவாஸ்கர் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சில வெள்ளைப் பந்து போட்டிகள் இருக்கின்றன!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” டி20 உலக கோப்பைக்கு பிறகு நாங்கள் முன்னுரிமை கொடுக்க ஆறு ஒருநாள் போட்டிகள் இருந்தன. அந்தப் போட்டிகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம். விராட் கோலி இந்த ஆறு ஆட்டங்களிலும் விளையாடி உள்ளார். அடுத்து ரோகித் சர்மா மற்றும் சிலர் டி20 போட்டிகளில் விளையாடினால் அவருக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் நமது வீரர்கள் புத்துணர்ச்சியோடு வருவார்கள். ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்கு முன்பாக எங்களுக்கு ஒரு நல்ல ஒரு வார கால முகாமொன்று உள்ளது. எனவே சூழ்நிலையை பொறுத்து நாங்கள் அந்தந்த கிரிக்கெட் வடிவங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இதன் அடிப்படையில் விராட் கோலி ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்!