இந்திய அணி அரையிறுதிக்கு போகுமா? எவ்வளவு வாய்ப்பு? – கபில்தேவ் திடுக்கிடும் பேச்சு!

0
2056
Kapil Dev

ஆஸ்திரேலியாவில் தற்போது 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுமா என்பதை தாண்டி, இந்திய அணி முதலில் அரையிறுதிக்குத் தகுதி பெறுமா என்கின்ற அளவில் பேச்சுகள் நிறைய இருக்கிறது.

இதற்கான காரணம், கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியேறி வந்ததுதான்.

- Advertisement -

இதற்கு பிறப்பு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மாறி ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் பொறுப்புக்கு வந்து நிறைய மாற்றங்கள் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்திய அணி குறித்த சந்தேகங்கள் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இடம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.

நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும்? அவர்கள் எவ்வளவு தூரம் தொடரில் முன்னேறுவார்கள்? கோப்பையை கைப்பற்றுவார்களா? என்பது குறித்து இந்திய அணிக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் பரபரப்பான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெல்லும் அணி அடுத்த போட்டியில் தோற்கும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பற்றி பேசுவது மிகவும் கடினம். என்னுடைய கவலை எல்லாம் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வர முடியுமா? அரையிறுதிக்கு முன்னேறுவார்களா? என்பதுதான். அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால்தான் அடுத்து அவர்கள் உலகக் கோப்பையை வெல்வது குறித்து எல்லாம் பேச முடியும். என்னைப் பொறுத்தவரை இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு 30% வாய்ப்புகள் மட்டுமே இருக்கிறது” என்று மிகவும் கவலையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் பற்றி அவர் பேசும் பொழுது “ஆல்ரவுண்டர்கள் எந்த ஒரு அணிக்கும் மிகவும் முக்கியமானவர்கள் அவர்கள் அணியில் பலமாக மாறுவார்கள். ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவுக்கு ஆறாவது பந்துவீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் மிகவும் உதவியாக இருக்கிறார். அவர் சிறந்த பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர். உண்மையில் சூர்யகுமார் யாதவ் இவ்வளவு தாக்கம் மிகுந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் அவர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். உலகமே தன்னைப் பற்றி பேசும்படி அவர் தன் பேட்டிங்கால் கட்டாயப்படுத்தி உள்ளார். அவரில்லாமல் இந்தியா டி20 அணியைப் பற்றி சிந்திக்க முடியாது. கேஎல் ராகுல் விராட் கோலி ரோகித் சர்மா இருக்கும் இந்திய அணி சூரியகுமார் யாதவ் இருப்பதால் மிகவும் பலமாக மாறுகிறது ” என்று தெரிவித்திருக்கிறார்!