“பும்ரா வந்தா மட்டும் எல்லாம் மாறிடாது ; இதுதான் சோகமான உண்மை ” – ஆகாஷ் சோப்ரா விளாசல்!

0
251
Aakash chopra

கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோல்வி அடைந்து வெளியேறியது. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது, டி20 போட்டியை அணுகுவதற்கான சரியான மனநிலை பேட்ஸ்மேன்கள் இடம் இல்லாமல் இருந்தது. மேலும் இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்யும் பொழுது எதிரணிக்கு இலக்கை நிர்ணயிப்பதில் சற்று தடுமாறியது.

இதற்கடுத்து கேப்டனாக ரோகித் சர்மாவும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக்கொண்ட பின், டி20 கிரிக்கெட்டை அணுகுவதில் இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் பெரிய மனம் மாறுதல் ஏற்பட்டது. அவர்கள் அதிரடியாக பேட்டிங்கை ஆரம்பித்தார்கள். ஒரு பேட்ஸ்மேன் அதிக ரன் அடிப்பதைத் தாண்டி, எல்லோரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பு பாணிக்கு வந்தார்கள். இதனால் இந்திய அணியின் பவர் பிளே ஸ்கோர் அதிகமானது. மேலும் இந்திய அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கும் இலக்கும் அதிகமானது.

- Advertisement -

இப்படி ஒருபுறம் தங்களிடம் இருந்த குறையை சரி செய்து கொண்டு பயணிக்க ஆரம்பித்த இந்திய அணிக்கு புது ரூபத்தில் தலைவலி வர ஆரம்பித்தது. அந்தத் தலைவலி பந்துவீச்சு ரூபத்தில் வந்தது. ஆசிய கோப்பைக்கு முன்புவரை இந்திய அணியின் பயணம் மிக வெற்றிகரமாகவே இருந்துவந்தது. ஆனால் ஆசிய கோப்பையில் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

ஆசிய கோப்பை அணிக்கு ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்தால் இடம்பெற முடியாமல் போனது மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது. அதே சமயத்தில் அந்த தொடரில் ஜடேஜா காயத்தால் விலகியதும், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஸ் கான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெளியேறியதும் பின்னடைவை இன்னும் பெரியதாக மாற்றியது.

இத்தோடு அணியில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் இறுதிகட்ட பந்துவீச்சு மோசமடைந்தது. மேலும் சாகலின் பந்துவீச்சும் மோசமாக இருந்து வருகிறது. இதனால் இந்திய அணி தொடர்ந்து ஆசிய கோப்பையில் இருந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் இந்திய அணி மீதான விமர்சனங்கள் அதிக அளவில் உருவாகிறது.

- Advertisement -

தற்போது இது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரராக சோப்ரா கூறும்பொழுது “பும்ரா ஒரு பந்து வீச்சாளர் வந்து எல்லாவற்றையும் மாற்ற முடியாது. இதுதான் சோகமான உண்மை. இந்த ஆண்டு பும்ரா மட்டும் இருந்த போது, மும்பை அணியில் என்ன ஆனது? அவர்கள் ஒன்றும் பெரிய வெற்றிகளைக் குவிக்க வில்லையே? எதிரணியின் 5 6 விக்கெட்டுகள் விழுமே தவிர ஒரு பெரிய மாற்றம் எல்லாம் ஆட்டத்தில் வந்துவிடாது” என்று கூறினார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் “சாகல் தொடர்ந்து வேகமாக வீசுகிறார். மெதுவாக வீசா விட்டால் அவருக்கு எப்படி விக்கெட்டுகள் கிடைக்கும். உண்மையில் இந்தியா பலவீனமான பந்துவீச்சு வரிசையை கொண்டிருக்கிறது. மேலும் உலக கோப்பையை வெல்லும் நம்பிக்கையையும் குறைவாக இருக்கிறது. இப்போது உங்களுக்கு தேவை நீங்கள் உடனடியாக வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் நான்கு முக்கிய வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியிடம் நீங்கள் தொடரை இழப்பீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்திய அணி நிர்வாகத்தைப் பற்றி பேசும்பொழுது “கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பிறகு நீங்கள் முகமது சாமிக்கு எந்த ஒரு டி20 போட்டிகளில் வாய்ப்பும் தரவில்லை. அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கொண்டு வந்தீர்கள். அவர் கோவிட் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக எந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடாத உமேஷ் யாதவை களம் இறங்கினார்கள். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக நீங்கள் டி20 அணிக்காக வைத்திருந்த தீபக் சஹர் தற்போது வெளியில் அமர்ந்து இருக்கிறார். நீங்களோ உமேசை வைத்து விளையாடி உள்ளீர்கள். அதாவது இது ஒரு சிறிய சட்டத்தை மீறியது” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.