“இந்த சிஎஸ்கே வீரரை எஸ்ஏ டி20 லீகிற்கு அழைத்து வருவேன்”!-கிராம் ஸ்மித் உறுதி!

0
4612

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே தென் ஆப்பிரிக்காவில் தற்போது எஸ்ஏ20 என்ற டி20 தொடரானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும் டர்பன் பணியை முனி சூப்பர் செகண்ட்ஸ் அணியும் பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல் அணியும் பார்ல் ராயல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஈஸ்டர்ன் கேப் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளது .

- Advertisement -

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகில் மற்ற நாடுகளைச் சார்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி துவங்கிய இந்த போட்டி தொடர் பிப்ரவரி மாதம் பதினொன்றாம் தேதி முடிவடைகிறது .

இந்தப் போட்டி தொடருக்கு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இந்தியா அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனி வெகு விரைவில் இந்தப் போட்டி தொடர்களில் ஏதேனும் ஒரு வகையில் பங்கேற்பார் எனக் கூறியுள்ளார் . இது பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் நாங்கள் ஒரு நல்ல உறவை பேணி வருகிறோம் . ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டிகளை நடத்துவதில் அவர்களிடம் உள்ள அனுபவத்திலிருந்து நாங்களும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு பிசிசிஐயின் விதிமுறைகள் நன்றாக தெரியும் . நாங்கள் அமைக்க விரும்பிய புத்துணருடன் கூடிய ஒரு கிரிகெட் லீக் இருக்கு எம் எஸ் தோனி போன்ற ஒரு தலைமை பண்பை கொண்ட வீரரின் பங்களிப்பு மிக முக்கியமானது அவர் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார் அவரது கிரிக்கெட் அனுபவம் மற்றும் அவரது சாதனைகள் எங்களுடைய புதிய லீக் இருக்கு வேறொரு வடிவத்தை கொடுக்கும் .

- Advertisement -

எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயமாக இந்த டி20 லீகிற்கு எம் எஸ் தோனியை அழைத்து வருவேன் என கூறினார் . பிசிசிஐ யின் கட்டுப்பாடுகளின் படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் உலகின் மற்ற கிரிக்கெட் நாடுகளில் நடக்கும் லீக்காட்டங்களில் பிசிசிஐ யின் அனுமதியின்றி பங்கேற்க இயலாது . தற்போது எம் எஸ் தோனி 2023 ஆம் வருடத்தின் ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த ஐபிஎல் தான் அவரது இறுதியா ஐபிஎல் தொடராக இருக்குமா என்று தெரியவில்லை .