ஆட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி வீரர் ஷமீலா காணல்

0
76
Shamilia Connell Collapsed On the Field

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்காளதேஷ் மகளிர் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் விக்கெட் கீப்பர் கேம்பில் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும் நேரம் செல்லச் செல்ல அணியின் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டே வந்தது. இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் கடைசி வேளையில் திடீரென நிலைதடுமாறி விழுந்த ஷமீலா காணல்

பங்காளதேஷ் மகளிர் அணி 46.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்து இருந்தது. அப்பொழுது மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஷமீலா காணல் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக மினி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். போட்டியில் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்த நிலையில் அதன் பின்னர் பந்து வீசவில்லை. இதனால் ஆட்டம் சிறிது நேரம் கழித்து தொடங்கப்பட்டது.

ஷமீலா காணல் குறித்து பேசியுள்ள கேப்டன் ஸ்டாஃபைன் டெய்லர்

மருத்துவக் குழு ஷமீலா காணலை தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகிறது. அவர் இவ்வாறு நிலைதடுமாறி கீழே விழுந்தது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் கிடைத்த இடைவெளியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசிய போட்டியின் மாற்றி விட்டோம்.

- Advertisement -

ஷமீலா காணலுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவர் அடிப்படையில் ஒரு போராளி. எந்த ஒரு சூழ்நிலையிலும் பயப்படாமல் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் படைத்தவர். எனவே நாம் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை, அவர் கூடிய விரைவில் குணமடைந்து விடுவார் என்று கூறியுள்ளார்.