16 கோடிக்கு இவர் வொர்த்தா? எதுக்காக அவ்ளோ கொடுத்து எடுத்தோம்? – கம்பீர் பேட்டி!

0
8428

ஐபிஎல் ஏலத்தில் 16 கோடி ரூபாய் கொடுத்து எதற்காக நீக்ரோஸ் புரானை எடுத்தோம் என விளக்கம் அளித்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

கொச்சியில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில், வரலாறு காணாத வகையில், 18.5 கோடிக்கு சாம் கர்ரன் பஞ்சாப் அணிக்கு எடுக்கப்பட்டார். அடுத்ததாக, கேமரூன் கிரீன் 17.5 கோடிக்கு மும்பை அணிக்கு எடுக்கப்பட்டார். மூன்றாவது அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இவர்களுக்கு அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில், 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார் நிக்கோலஸ் பூரான். இவரை லக்னோ அணி போராடி எடுத்தது.

ஆரம்பத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் இரண்டு அணிகளும் இவரை எடுப்பதற்கு போட்டி போட்டன. டெல்லி அணி இந்த போட்டியில் நுழைந்த உடன் சென்னை அணி விலகிக் கொண்டது. இறுதியில் இவரை எடுப்பதற்கு டெல்லி மற்றும் லக்னோ 2 அணிகளும் போட்டி போட்டன. 16 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி எடுத்தது.

பூரான் இவ்வளவு கோடி ரூபாய்க்கு நிகரான வீரரா? எதற்காக லக்னோ அணி இவ்வளவு கொடுத்து இவரை எடுக்க வேண்டும்? என பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் நிலவியது. இதற்கு பதில் கொடுத்து இருக்கிறார் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர்.

- Advertisement -

“கடந்த ஐபிஎல் சீசனில் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. அவரது திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து எடுத்திருக்கிறோம். அவருக்கு 26-27 வயது ஆகிறது. இன்னும் 5-6 வருடங்கள் விளையாடுவார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இனிமேல் தான் உச்சத்தை காணப்போகிறார்.

ஒவ்வொரு சீசனிலும் மூன்று அல்லது நான்கு போட்டிகள் வெற்றி பெற்றுக் கொடுத்தால் போதுமானது. அதுவே புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

டாப் 4 இடங்களிலும் பேட் செய்வார். அதேநேரம் 6-7வது இடத்தில் செய்வார். எத்தனை வீரர்கள் இவரைப்போன்று இருக்கிறார்கள். மேலும் துணிச்சலாக பேட்டிங் செய்யக் கூடியவர். தனது அதிரடியின் மூலம் இவரால் போட்டியை மாற்றி அமைக்க முடியும். திருப்புமுனையான வீரராகவும் இருப்பார். மேட்ச் வின்னர் ஆகவும் இருப்பார் என்பதால் இவருக்கு இவ்வளவு தொகை சரியானது.” என கம்பீர் பேசியுள்ளார்.