கடைசி ஓவரை மட்டும் ஷமிக்கு கொடுத்தது ஏன்? – ரோகித் சர்மா மாஸ் தகவல்!

0
1095
Rohitsharma

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பயிற்சி போட்டி ஒன்றில் பிரிஸ்பன் மைதானத்தில் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அரைசதங்கள் அடிக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை பதினெட்டாவது ஓவர் வரை கையில் வைத்திருந்தது. 19 மற்றும் 20 ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் மற்றும் முகமது சமி இருவரும் ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்து, வெற்றியையும் தந்து விட்டார்கள். இறுதியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் கோவிட் அவற்றிலிருந்து மீண்டு வந்த முகமது சமியை 19வது ஓவர் வரை இந்திய அணி நிர்வாகம் களமிறங்கவில்லை. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை எனும் போது திடீரென அவரை களம் இறங்கினார்கள். அவர் கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் அதில் ஒரு ரன்அவுட் உண்டு.

தற்போது முகமது ஷமிக்கு ஏன் கடைசி ஓவர் மட்டும் தரப்பட்டது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். அதில் ” அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பி வருகிறார். எனவே அவருக்கு நாங்கள் ஒரு ஓவர் மட்டுமே கொடுக்க விரும்பினோம். இது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். புதிய பந்தில் அவர் எவ்வளவு சிறப்பான வேகப்பந்துவீச்சாளர் என்று நமக்குத் தெரியும். எனவே நாங்கள் அவருக்கு ஒரு சவாலை கொடுக்க விரும்பினோம். எனது அவரை இறுதிக்கட்ட ஓவரில் ஒரு ஓவரை வீச வைக்கலாம் என்று முடிவு செய்தோம். அவர் இறுதிகட்ட ஓவரையும் மிகச் சிறப்பாக வீசி விட்டார் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா
” மொத்தத்தில் நாங்கள் நன்றாக பேட் செய்தோம். இன்னும் ஒரு 10, 15 ரன்கள் சேர்த்து எடுத்திருக்கலாம். நாங்கள் இறுதிவரை நின்று பேட் செய்ய விரும்பினோம். அதை சூர்யா செய்துமுடித்தார். பெரிய மைதானங்களில் விளையாடும் பொழுது புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். ஓவருக்கு எட்டு அல்லது ஒன்பது ரன்களை கொண்டுவர ஒன்று இரண்டு என ரன்கள் ஓடி எடுக்க வேண்டும். இதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம் ” என்று கூறியுள்ளார்!