கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

2023 உலகக்கோப்பை போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏன்? பாகிஸ்தான் உருவாக்கும் புதுப்புது பிரச்சனைகள்!

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முதல்முறையாக இந்தியாவில் வைத்து முழுமையாக நடத்தப்பட இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடர் வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயத்தில் இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணைகளை வெளியிடுவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. தற்பொழுது இதற்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தேசமாகத் தயாரிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையில் பாகிஸ்தான் அணிக்கான அட்டவணையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு உடன்பாடு இல்லை.

- Advertisement -

மிகக்குறிப்பாக இந்திய அணி உடன் குஜராத் அகமதாபாத்திலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சுழலுக்குச் சாதகமான சென்னையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பேட்டிங் செய்ய சாதகமான பெங்களூரிலும் போட்டி அட்டவணை இருந்தது.

இந்த அட்டவணையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு விருப்பம் இல்லை. அவர்கள் தங்களுக்குச் சாதகமான சூழல்களில் விளையாடுவதற்கு விரும்புகிறார்கள். இதனால் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் அவர்கள்தான்.

முதலில் அவர்கள் அகமதாபாத் மைதானத்தில் விளையாட தயாராக இல்லை. பிறகு சென்னையில் விளையாட தயாராக இல்லை, இப்பொழுது பெங்களூரில் விளையாட தயாராக இல்லை. அவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

போட்டி அட்டவணையில் உங்களது பலம் மற்றும் பலவீனத்தின் அடிப்படையில் மைதானங்களை கேட்கத் தொடங்கினால், அது உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணைகளை வெளியிடுவதில் பெரிய சிரமத்தை உண்டாக்கும்!” என்று அவர் கூறியிருக்கிறார்!

Published by