ஸ்ரேயாஸ் எதுக்கு? சாம்சனுக்கு நடப்பது அநீதி! – மீண்டும் முன்னாள் இந்திய வீரர் அதிரடி!

0
537
ICT

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான t20 போட்டி தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்காக ஆயத்தமாகி வருகிறது இந்த வேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானான சஞ்சீவ் சாம்சனை t20 போட்டிகளில் ஆடும் லெவனில் தேர்ந்தெடுக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன .

இதனைப் பற்றி பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர் . தற்பொழுது புதிய சர்ச்சையாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டோட்டா கணேஷ் தனது ட்விட்டரில் கூறிய கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது .

சஞ்சீவ் சாம்சனை ஆடும் அணியில் தேர்ந்தெடுக்காதது பற்றி தன்னுடைய ட்விட்டரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் இடைக்கால பயிற்சியாளர் வி வி எஸ் லட்சுமணன் ஆகியோரை கடுமையாகச் சாடி இருந்தார் கணேஷ் .

இதனைப் பற்றி அவர் பதிவிட்டது ” இந்தப் போட்டியிலும் சஞ்சீவ் சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை என்பது என்னால் ஆழமாக நம்ப முடியவில்லை ” என்று டோட்டா கணேஷ் பதிவு செய்திருந்தார் .

மேலும் அவர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார் இது பற்றி பதிவிடுகையில் இந்தியா அணி எத்தனை தோல்விகளை பெற்றாலும் அவர்கள் பாடம் கற்றுக் கொள்ளப் போவதில்லை அதே தவறை தான் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் க்கு பதிலாக சஞ்சீவ் சாம்சனை எடுத்து இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார் .

இது தொடர்பாக ரசிகர் ஒருவர் “அப்பொழுது நீங்கள் ஸ்ரேயாஸ் ஐயரின் திறமையை குறைத்து மதிப்பிடுகின்றீர்களா”? என்று கேட்டிருந்தார்,
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கணேஷ் ” இது ஒரு வீரரின் திறமையோ மதிப்பயோ பற்றியது அல்ல ; ஸ்ரேயாஸ் ஐயரும் திறமையான வீரர் தான் ஆனால் டி20 வடிவ போட்டியில் சஞ்சீவ் சாம்சன் அணிக்கு பொருத்தமான வீரர். இந்திய அணியின் நிர்வாகம் ஸ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு தரமான வீரர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ” என்று கூறி தனது ட்வீட்ஐ முடித்துள்ளார் .

டோட்டா கணேஷ் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆவார் இவர் கர்நாடக அணிக்காக ரஞ்சிப் போட்டிகளில் ஆடியுள்ளார் இந்தியா அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் ஆடி உள்ளார் . சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களையும் ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் . 1997 இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தின் போது கேப் டவுனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் ..