நாங்கள் ஏன் இந்திய அணி பின்னால் ஓட வேண்டும் ; எங்களுடன் விளையாட வேண்டுமானால் அவர்களை இதைச் செய்ய சொல்லுங்கள் – முன்னாள் பாகிஸ்தான் தலைவர்

0
156

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் போட்டிகள்( பை லேட்டரல் சீரியஸ்) 2012/13 ஆண்டுக்கு பின்னர் தற்பொழுது வரை நடைபெறவில்லை. கடைசியாக பாகிஸ்தான் அணி 2012/13 ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அதன் பின்னர் இந்த இரு அணிகளும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.அரசியல் சார்ந்த ஒரு சில விஷயங்கள் இந்த இரு நாட்டுக்கும் இடையே தற்பொழுது வரை முடிவுக்கு வராத காரணத்தினால், கடந்த 10 ஆண்டுகளில் இந்த இரு அணிகளும் எந்த ஒரு தொடர் போட்டிகளிலும்(பை லேட்டரல் சீரியஸ்சில்) விளையாட வில்லை.

- Advertisement -

இந்தியா எப்போது தயாராக இருக்கிறதோ அப்போது தான் நாமும் தயாராக இருக்க வேண்டும்

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் தலைமை அதிகாரியான எஷான் மணி தற்பொழுது ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.”இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் எந்தவித மறுப்பும் தெரிவிக்க மாட்டோம்.

ஆனால் நாங்கள் ஒரு முடிவு எடுத்தால், இந்திய அணி எப்பொழுது அந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறதோ அதுவரை நாங்கள் காத்திருக்க வேண்டும்.எங்களுக்கும் சொந்த நேர்மை மற்றும் மரியாதை உள்ளது. நாம் ஏன் இந்தியாவின் பின்னால் ஓட வேண்டும்? நாம் கூடாது. அவர்கள் எப்போது தயாராக இருப்பார்களோ, அப்போது நாமும் தயாராக இருப்போம்.

- Advertisement -

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பை லேட்டரல் சீரியஸ் நடத்தப்பட வேண்டும்

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தற்பொழுதைய தலைமை அதிகாரியான ரமீஷ் ராஜா இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பை லேட்டரல் சீரியஸ் நடத்த நீண்ட காலமாகவே ஆர்வமாக உள்ளார். இந்திய பாகிஸ்தான் அணிகள் உட்பட நான்கு அணிகள் கொண்ட ஒரு டி20 தொடர் நடத்துவதே அவருடைய இலக்கு.

இது சம்பந்தமாக அவர் கூறுகையில்,”கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடரில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் வரலாறு காணாத டிஆர்பியை எட்டியது. அதுமட்டுமின்றி போட்டிக்கான டிக்கெட்டுகள் வரலாறு காணாத வகையில் விற்றுத் தீர்ந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் தலைமை அதிகாரியாக நான் பேசவில்லை ஒரு கிரிக்கெட் ரசிகனாக நான் இதை பேசுகிறேன். ஒவ்வொரு ரசிகருக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியை காண பதில் அலாதி மகிழ்ச்சி இருக்கும். அனைவரும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையிலான அனைவரும் போட்டியை காண ஆர்வமாக இருக்கும் பொழுது நாம் ஏன் அரசியல் சார்ந்த பிரச்சினைகளை கூறி இதை புறக்கணிக்க வேண்டும். கூடிய விரைவில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பை லேட்டரல்  சீரியஸ் நடத்தப்பட வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.