“பதான் ஏன் நடனம் ஆடனும்? இந்தியாவா ஜெயிச்சுச்சி? நடுநிலைமை எங்கே?” – பாக் அசார் அலி கடும் விமர்சனம்!

0
3419
Azar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதை விட, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுதான் பல பேச்சுகளை கிரிக்கெட் மட்டத்தில் உருவாக்கி இருக்கிறது.

மேலும் பாகிஸ்தான் பெற்ற இந்தத் தோல்விதான், பாகிஸ்தான் கிரிக்கெட் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது கேப்டன் மற்றும் நிர்வாகத்தில் இருக்கும் நிர்வாகிகளின் மாற்றம் என்று பலரின் பதவிகளுக்கு குறி வைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குள் எப்படியான அரசியல் நிலவி வருகிறது? மேலும் விளையாடும் வீரர்கள் தங்களுடைய உடல் தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறார்கள்? கடைசியாக உடல் தகுதி தேர்வு எப்பொழுது பாகிஸ்தான் அணிக்குள் நடத்தப்பட்டது? என்பது போன்ற பல உள் விவகாரங்கள் வெளியே கிளம்பி வந்திருக்கிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக வென்றதும் சென்னை மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது. அப்போது ரசிகர்கள் அவர்களுக்கு எழுந்து நின்று கைதட்டி தங்களுடைய வரவேற்பை தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வின் போது உற்சாக மிகுதியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் நடனமாடினார். அப்போது மைதானத்தில் இருந்த இந்திய இர்பான் பதான் அவருடன் சேர்ந்து கொண்டு நடனம் ஆடினார்.

- Advertisement -

இதுகுறித்து அப்பொழுது பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பரீத் என்பவர் “இர்பான் பதான் ஆப்கானிஸ்தான் அணியின் பொறுப்பில் இருக்கிறார் போல, அதுதான் அவர்களது வெற்றிக்கு நடனமாடுகிறார். இது நல்ல நடுநிலை” என்பதாக விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் அலி இது குறித்து கூறும் பொழுது ” இர்பான் பதான் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவரா? அவர் ஒரு வர்ணனையாளர் மற்றும் அவர் நடுநிலையாக இருக்க வேண்டும். நேற்று இரவு இந்தியா ஜெயிக்கவில்லை; ஆப்கானிஸ்தான்தான் ஜெயித்தது. ஆப்கானிஸ்தான் ஒன்றும் இர்பான் பதான் நாடு கிடையாது!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!