“திருந்த மாட்டிங்களா.. இந்த பையனை எதுக்கு வீட்டுக்கு அனுப்புனிங்க?” – அஜய் ஜடேஜா விளாசல்!

0
1229
ICT

டி20 கிரிக்கெட் அறிமுகமாகி, நல்ல வரவேற்பை உலகக் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெற்ற பிறகு, மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பெரிய கிரிக்கெட் அணிகள் தொடர்ந்து விளையாட வேண்டியது இருக்கிறது.

இதன் காரணமாக பெரிய கிரிக்கெட் நாடுகள் முன்பை விட அதிகமாக வீரர்களை உருவாக்க வேண்டியதும் இருக்கிறது. தொடர்ச்சியாக வீரர்கள் விளையாடும் பொழுது அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் ஒரே அணி விளையாடுவதும், பிறகு இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடர்களில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பதும் என திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

பணிச்சுமையை குறைக்க இது உதவுகிறது என்றாலும் கூட, இளம் வீரர்கள் தங்களை சர்வதேச தரத்திற்கு தயார்படுத்திக் கொள்வதில் கொஞ்சம் பிரச்சனையையும் உண்டு செய்கிறது. குறிப்பிட்ட வயதில் தொடர்ச்சியாக விளையாடும் பொழுதுதான், இளம் வீரர்கள் தங்களை நல்ல முறையில் தயார்படுத்திக் கொள்ளவும் அனுபவம் பெறவும் முடியும்.

இந்த வகையில் இளம் விக்கெட் கீப்பர் இசான் கிஷான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் கில் இல்லாத காரணத்தினால் இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடினார். இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடினார். அதில் இரண்டு அரை சதமும் அடித்தார். ஆனால் அவர் கடைசி இரண்டு போட்டிகள் விளையாடாமல் வீடு திரும்பினார். ஒரு முழு வாய்ப்பு அவருக்கு தரப்படவில்லை.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறும்பொழுது “உலகக் கோப்பைக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இருந்தது. இஷான் கிஷான் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடிவிட்டு வெளியேறினார். மூன்று போட்டிகளுக்குப் பிறகு அவர் ஓய்வு எடுக்க வேண்டிய அளவுக்கு சோர்வாக இருந்தாரா?

அவர் உலகக் கோப்பையிலும் முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு விளையாடவில்லை. வாய்ப்பு கிடைத்த பொழுது எத்தனை வீரர்கள் இவரை போல் இரட்டை சதம் அடித்தார்கள்?. இப்படி முழுமையாக ஆட வைக்காமல் இடையில் வீட்டுக்கு அனுப்பி கொண்டு இருந்தால், அவர் முழுமையாகத் தயாராவதை எப்படி உறுதி செய்வது?” என்று கடுமையாகக் கேள்விகள் முன் வைத்திருக்கிறார்!