அஸ்வின் குறித்து மட்டும் பேசிய பாண்டிங் ஏன் டேவிட் வார்னரைப் பற்றி எதுவும் பேசவில்லை – கம்பீர் ஆவேசம்

0
146
Gautham Gambhir about Warner Dead Ball Six

நேற்று 2021 ஆம் ஆண்டிற்கான நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரின் 2வது அரையிறுதி ஆட்டம் நடந்து முடிந்தது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் குவித்தது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், இறுதியில் மார்க் ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ வேட் இவர்கள் இருவரின் அதிரடியான பேட்டிங் காரணமாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

முகமது ஹபீஸ் ஓவரில் சிக்ஸர் அடித்த டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 8ஆவது ஓவரை முகமது ஹபீஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை டேவிட் வார்னர்கு எதிராக அவர் வீசும் பொழுது தவறுதலாக பந்து அவர் கையிலிருந்து நழுவி இரண்டு முறை மைதானத்தில் பிட்ச் ஆனது. பொதுவாக இவ்வாறு பந்து கைகழுவி செல்லும் பொழுது அது டெட் பாலாக அறிவிக்கப்படும். அந்த பந்தை மேற்கொள்ளும் பேட்ஸ்மேனும் அந்த பந்தை தவிர்த்து விடுவார்.

ஆனால் நேற்று முகமது ஹபீஸ் வீசிய அந்த பந்தை டேவிட் வார்னர் நன்கு நேரம் எடுத்துக்கொண்டு தூக்கி அடித்தார். பவுண்டரிக்கு மேல் பறந்து சென்று அந்த பந்து சிக்ஸர் ஆனது. மேலும் நடுவர் வாயிலாக அந்த பந்தை நோபால் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஃப்ரீ ஹிட்டும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த அனைத்து ரசிகர்களையும் கேள்வி எழுப்ப செய்தது.

ஒரு பக்கம் டேவிட் வார்னர் அடித்தது முறை தான் என்றும், மறுபக்கம் இது மிகவும் தவறு என்று ரசிகர்கள் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டு வந்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட இந்த நிகழ்வை குறித்து பேசினார்கள். அதில் நமது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரும் பேசினார்.

- Advertisement -

ஷேன் வார்னே இப்பொழுது ஏன் பேச மறுக்கிறார் !?

ரிக்கி பாண்டிங் எப்பொழுதும் விளையாட்டு நெறி குறித்து பேசிக் கொண்டே இருப்பார். அதேபோல ஷேன் வார்னேவும் இது சம்பந்தமான பதிவுகளை ட்விட்டர் வலைதளத்தில் பதிவு விட்டுக்கொண்டே இருப்பார். ஒருமுறை ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மங்கட் முறைப்படி ரன் அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையானது. அது குறித்து ஷேன் வார்னே மிகப்பெரிய அளவில் பேசினார். ஆனால் நேற்று டேவிட் வார்னர் அவ்வாறு அடித்தது இது குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்று கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பினார்.

ஷேன் வார்னே மட்டுமின்றி பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மட்டும் நிறைய பேசினார்கள். ஆனால் டேவிட் வார்னர் குறித்து மட்டும் ஏன் அவர்கள் எதுவும் பேசவில்லை. எப்பொழுதும் மற்ற ஊர் கிரிக்கெட் வீரர்களை பற்றி பேசுவது மிகவும் எளிது, ஆனால் சொந்த ஊர் கிரிக்கெட் வீரர்களை பற்றி பேசுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இவ்வாறாக நேற்று கௌதம் கம்பீர் தன்னுடைய அதிரடியான கருத்துகளை சரமாரியாக கூறி அனைவரையும் கதி கலங்க வைத்தார்.