“இந்தியாவின் தோல்வி இத்தோடு நிற்கப்போவதில்லை – முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேட்டி!

0
1627

இந்திய அணியும் நிர்வாகமும் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். ஆதலால் இந்திய அணியின் தோல்வி இதோடு நிற்கப்போவதில்லை என்று கடுமையாக சாடி இருக்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரிம்.

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி டி20 போட்டிகளை முடித்த பிறகு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஆறு ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர். வெறும் ஐந்து பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியதால் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகியது.

இதனை குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரிம், மீண்டும் மீண்டும் அதே தவறை இந்திய அணியும் நிர்வாகமும் செய்கிறது என்று சாடியிருக்கிறார். அவர் அவர் பேட்டியளித்ததாவது:

“ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து அதே தவறை செய்து வருகிறது. வழக்கமாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கினால் தவறு நடக்கிறது என்று தெரிந்தும் கூடுதலாக ஒரு பந்துவீச்சு பேட்ஸ்மேன் வேண்டும் என்று முடிவு செய்யாமல், முதல் ஒரு நாள் போட்டியிலும் களமிறங்கியது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அணியில் இல்லை என்றால், அவருக்கு நிகரான அல்லது அந்த இடத்திற்கு வரக்கூடிய மற்றொரு ஆல்ரவுண்டரை ஏன் தேர்வு செய்யாமல்?, வெறுமனே பேட்ஸ்மேன் உடன் களமிறங்கி விட்டார்கள்.

கூடுதல் பேட்டிங் வேண்டும் என்பதற்காக ஒரு பவுலர் குறைவாக களமிறங்கினால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஏன் நினைக்கவில்லை? தீபக் ஹூடா அணியில் தான் இருந்தார். அவரை விளையாட வைத்திருந்தால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிற்கும் பயன்பட்டு இருப்பார்.

கடந்த பல வருடங்களாக இதே தவறை இந்திய அணி செய்து வருவதை நான் பார்த்திருக்கிறோம். குறிப்பாக இந்திய பவுலர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்வீப் நன்றாக விளையாடும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விக்கெட் எடுப்பதற்கு ஏன் முன்னரே திட்டங்கள் வைத்திருக்கவில்லை?.

டாம் லேத்தம் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் இரண்டையும் நன்றாக ஆடக்கூடியவர். மீண்டும் ஒருமுறை அப்படியொரு வீரர் இந்தியாவிற்கு எதிராக நன்றாக செயல்பட்டு இருக்கிறார். இதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பட்சத்தில் இந்திய அணிக்கு தொடர்ந்து தோல்விகளே கிடைக்கும். அதை சரி செய்வதற்கு அடுத்த போட்டியிலாவது முயற்சி செய்யுங்கள்.”என்றார்.