ஏன் இப்படி?.. “ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் செஞ்சதை ராகுல் டிராவிட் செய்யல” – முன்னாள் இந்திய வீரர் கடுமையான விமர்சனம்!

0
136
Dravid

இந்திய ஆண்களுக்கு அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெல்லுகின்ற நிலையில் இருந்து, கடைசி நேரத்தில் பேட்டிங்கில் செய்த தவறுகளால் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு வந்து விடும் என்று நினைத்திருந்த நேரத்தில், இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வி அடைந்தது. மிக எளிதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் நிலைமையில் இருந்த பொழுது, சாகல் தன்னுடைய மூன்றாவது ஓவரில் அற்புதமான விருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இப்படியான நிலைமையில் சாகலுக்கு அவருடைய கடைசி ஓவரை கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளர்களிடம் சென்றார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வெஸ்ட் இண்டீஸ் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் எளிதாக விளையாடி வெற்றிக்கான ரன்னை எடுத்து இந்திய அணியை வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கடைசி நேர முடிவுகள்தான் அமைந்தது. இந்த நேரத்தில் அவருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடமிருந்து எந்த விதமான செய்தியும் களத்திற்குள் அனுப்பப்படவில்லை. அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக கேப்டனாக விளங்கும் பொழுது, அவருக்கு தேவையான செய்திகளை ஓவருக்கு ஓவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா தந்து கொண்டே இருப்பார்.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் ” ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியில் அப்பட்டமான தவறுகள் இருக்கின்றன. முதல் ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய வந்த பொழுது அக்சர் படேலுக்கு ஓவர் தந்தது. இரண்டாவது ஆட்டத்தில் சாகலுக்கு ஓவர் தராதது என அவரது தவறுகள் வெளிப்படையாக தெரிகிறது.

இது ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகவும் புத்திசாலித்தனமான கேப்டனாக இருந்தார். அங்கு அவருக்கு பயிற்சியாளர் நெக்ராவின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போதைய இந்திய அணியில் அப்படி பயிற்சியாளர் ஆதரவு இவருக்கு இல்லை.

உண்மையில் நாம் தேடும் டி20 அணிக்கான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டா? நான் அப்படி நினைக்கவில்லை. நமக்கு புதிய ஒரு பயிற்சியாளர் இந்த வடிவத்திற்கு தேவை. ஹர்திக் பாண்டியாவிடம் நல்ல துடிப்பு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதரவை ராகுல் டிராவிட் வழங்கவில்லை!” என்று கூறியிருக்கிறார்!