அர்ஸ்தீப் சிங் ஏன் விளையாடவில்லை? – கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம்!

0
96
ICT

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி தலா மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது!

மாறிவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட்டை மாற்றி அமைக்க இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது!

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் அடுத்து நடைபெறும் ஒரு நாள் தொடருக்கு துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான புவனேஸ்வர் குமார் விராட் கோலி ரோஹித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெறவில்லை.

இன்று மும்பையில் நடைபெறும் முதல் டி20 போட்டி டாசில் வென்று இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது. இந்திய அணியில் இன்று சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகம் ஆகிறார்கள்.

இந்த நிலையில் இன்று விளையாடும் இந்திய அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. டாஸ் நிகழ்வின்போது ஹர்திக் பாண்டியா இது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“உற்சாகமாக இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவதில் எப்பொழுதும் உற்சாகமாக இருந்தேன். இப்பொழுது கேப்டனாக முன்னணியில் இருந்து விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது. மேலும் அணிக்குள் வந்துள்ள புதிய வீரர்கள் தங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். நாங்கள் இதில் முதலில் பேட் செய்யப் போகிறோம் ஆனால் இது சேசிங் செய்ய ஏற்ற மைதானம் என்பது உண்மைதான். இருந்தாலும் இதுபோல கடினமான சூழல்களில் எங்களை பொருத்திக் கொண்டு நாங்கள் செயல்படுவதை சிறப்பாக விரும்புகிறேன். அணிக்குள் வரும் யாருக்கும் நம்பிக்கை கொடுப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இன்று கில் மற்றும் சிவம் மாறி இருவரும் அறிமுகமாகிறார்கள். துரதிஷ்டவசமாக அர்ஸ்தீப் சிங் கிடைக்கவில்லை!” என்று கூறி இருக்கிறார்!