நான் ஏன் ஸ்டம்புக்கு பின்னால் அதிக ஷாட்கள் அடிக்கிறேன்? – சூரியகுமார் யாதவ் பேட்டி!

0
1558

ஸ்டம்புக்கு பின்னால் நான் அதிக ஷாட்கள் அடிக்க காரணமென்ன என்று பதில் கொடுத்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

இந்தியா-இலங்கை தொடரின் மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.

- Advertisement -

அடுத்துவந்த சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார். கடைசியில் வந்த அக்சர் பட்டேல் 21 ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க ஜோடி குஷால் மெண்டிஸ்(23), நிஷங்கா(15) இருவரும் நல்ல துவக்கம் கொடுக்க, தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் ஷனக்கா 17 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, நிலையான பார்ட்னர்ஷிப் கிடைக்காததால்,இறுதியில் 16.4 ஓவர்கள் மட்டுமே பிடித்து 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி. 1-2 என டி20 தொடரை இழந்தது இலங்கை அணி.

சதமடித்து அசத்திய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

- Advertisement -

“ப்ராக்டீஸ் செய்யும்போது அதிக அழுத்தத்தை நான் எடுத்துக்கொள்வேன். அது போட்டியின்போது எனக்கு உதவுகிறது. ஒரு பந்திற்கு நிறைய ஷாட்கள் வைத்துக்கொள்ள ப்ராக்டீஸ் செய்கிறேன். பவுலிர்கள் ஒவ்வொருமுறையும் நம்மை வித்தியாசமாக பந்துவீச சர்ப்ரைஸ் பண்ணும்போது, நாமும் அவர்களை சர்ப்ரைஸ் பண்ணலாம்.

அதிகமான ஷாட்களை நான் ஸ்டம்புக்கு பின்னால் திசையில் அடிக்க காரணம், குறைந்த தூரம் பவுண்டரிகள் இருக்கிறது. 50-60 மீட்டரில் சிக்ஸர் அடிக்கலாம். அங்கே பீல்ட்டிங் அதிக அளவில் இருக்காது. அதற்காக தீவிர பயிற்சி செய்தேன்.

ராகுல் டிராவிட் எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்கிறார். அழுத்தம் எதுவும் வேண்டாம், உள்ளே சென்று உன்னுடைய கேம் ஆடு என்பார். அது இன்னும் தைரியம் கொடுக்கிறது.” என்றார்.