நீங்க ஏன் சூர்யகுமார் மாதிரி, 360 டிகிரி ஷாட்ஸ் ஆட மாட்றீங்க? – விராட் கோலி கொடுத்த பதில்!

0
53844

சூரியகுமார் யாதவை போல் ஏன் மைதானங்களில் அனைத்து பகுதிகளிலும் சாட்கள் அடிப்பதில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விராட் கோலி அசத்தலாக பதில் அளித்திருக்கிறார்.

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மன்களில் ஒருவரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி, “ரன் மெஷின்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். ஏனெனில் இவர் குவிக்கும் ரன்கள் அப்படி.

- Advertisement -

இந்திய அணிக்காக மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடி வரும் விராட் கோலி, எந்த வகையிலும் தனது பேட்டிங்கை மாற்றிக் கொள்வதில்லை. ரன் குவிக்கும் வேகத்தை மட்டுமே அதிகரிக்கிறாரே தவிர, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது பேட்டிங் ஸ்டைலை அவர் மாற்றிக் கொண்டதே இல்லை.

அவரால் மைதானங்களில் அனைத்து பக்கங்களிலும் ஷார்ட்களை அடிக்க முடியும். சூரியகுமார் யாதவை போன்று 360 டிகிரியிலும் விளையாட முடியும். ஆனால், எக்காரணம் கொண்டும் அதை அவர் மாற்றிக் கொண்டதே இல்லை.

இது பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு விராட் கோலியை பேட்டி எடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் இயான் செப்பல் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு விராட் கோலி திறம்பட பதில் அளித்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய போட்டியின் போது நடைபெற்ற கமெண்டரியில் இயன் செப்பல் பேசியதாவது, “இரண்டு வருடத்திற்கு முன்பு கோலியை பேட்டி எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு பேட்டியில் தனது கிரிக்கெட் போட்டியை பற்றி மிக அருமையாக எடுத்துச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் எடுத்த பேட்டிகளில் சிறப்பான ஒன்று என்று இன்றளவும் கூறுவேன்.

அப்போது, ஏன் மைதானத்தின் பல பக்கங்களிலும் அடிக்கும் அளவிற்கு சாட்டுகள் இருந்தும் நீங்கள் விளையாடுவதில்லை? என்று நான் அவரிடம் கேட்டபோது, ‘அப்படி நான் டி20 போட்டிகளில் விளையாடும்பொழுது, அது எனது டெஸ்ட் போட்டிகளின் பேட்டிங்கை வீணாக்குகிறது. ஒருபோதும் டெஸ்ட் போட்டிகளை நான் விட்டுக் கொடுப்பதில்லை. ஆகையால் போதுமானவரை எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.’ என்று பதில் அளித்தார்.

இந்த அளவிற்கு புரிதலோடு அவர் விளையாடி வருவதால் மட்டுமே உச்சத்தில் இருக்கிறார் என்று அப்போது நான் புரிந்து கொண்டேன். கிரிக்கெட்டை பற்றி நிறைய பேசினோம். அறிவார்ந்த நேர்காணல் அது.” என விராட் கோலியை பெருமையாக பேசினார்.