நியூசிலாந்து டி20 தொடருக்கு “தினேஷ் கார்த்திக்கை எடுத்திருக்கலாம், ஆனால் ஏன் எடுக்கலன்னா..” – தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

0
3086

நியூசிலாந்து டி20 தொடரில் எதற்காக தினேஷ் கார்த்திக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா.

டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன் இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதை முடித்தவுடன், நேரடியாக வங்கதேசம் சென்று முதல் கட்டமாக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்திய அணியின் தேர்வு குழுவின் தலைவர் நேற்றைய தினம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிசிசிஐ தேர்வு குழு உறுப்பினர்களுடன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அத்துடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் கே எல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. டி20 அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துகிறார். அதே போல் ஒரு நாள் தொடரை சிக்கர் தவான் வழி நடத்துகிறார்.

இந்த தொடரில் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக், குல்தீப் சென் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இத்தொடரில் எடுக்கப்படவில்லை. எதற்காக இவர்களை எடுக்கவில்லை?, குறிப்பாக தினேஷ் கார்த்திக் ஏன் டி20 போட்டிகளில் எடுக்கவில்லை?என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. இதற்கு சேத்தன் சர்மா பதில் அளித்திருக்கிறார்.

“டி20 தொடர்களில் தினேஷ் கார்த்திக் எங்களது பட்டியலில் இருந்தார். நாங்கள் வெவ்வேறு வீரர்களை எடுப்பதற்கு காரணம், வரும் போட்டிகளில் வெவ்வேறு வீரர்களை வைத்து இந்திய அணியின் காம்பினேஷனை மாற்றிப் பார்க்கலாம் என்ற ஒரு ஆராய்ச்சி முடிவிற்காக தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. தினேஷ் கார்த்திக் கதவுகள் அடைக்கப்படவில்லை. அடுத்தடுத்த தொடர்களில் அவரது பெயர் முன்னணியில் தான் இருக்கிறது.” என்று அவர் தெளிவு படுத்தினார்