“நான் ஏன் பந்து வீசுவதில்லை? உலக கோப்பையில் வீச வாய்ப்பு இருக்கா?..!” – மவுனம் கலைத்த ரோகித் சர்மா!

0
6374
Rohit

இந்திய அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகி தற்பொழுது இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணிக்கு ஒரு சிறிய பிரச்சனை இருந்து வருகிறது. பேட்டிங் வரிசையில் இருந்து யாராவது பகுதிநேரமாக பந்து வீசக்கூடியவர்கள் இல்லை.

- Advertisement -

இதன் காரணமாக ஆறாவது பந்துவீச்சு விருப்பத்துக்கு, யாராவது ஒரு முழுமையான பந்துவீச்சாளரை பிளேயிங் லெவனில் கொண்டு வர வேண்டியது இருக்கிறது.

இதன் காரணமாக ஒரு பேட்ஸ்மேனை பிளேயிங் லெவனில் வைப்பதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பத்தாம் இடம் வரை பேட்டிங்கை வைக்கும் அளவுக்கு இருந்து வருகிறார்கள்.

உதாரணமாக இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, சிராஜ், பும்ரா, குல்தீப் மற்றும் ஜடேஜா என 5 பந்துவீச்சாளர்கள் இருக்க, பேட்டிங் வரிசையில் இருந்து ஒரு பகுதிநேர பந்துவீச்சாளர் ஆறாவது பந்துவீச்சாளராக கிடைத்தால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் சூரியகுமார் மாதிரியான ஒரு பேட்ஸ்மேன் இடம் பெறுவார்.

- Advertisement -

இப்படி ஏழாவது இடத்தில் சூரியகுமார் மாதிரியான பேட்ஸ்மேன் வந்து, எட்டாவது இடத்தில் ஜடேஜா இருந்தால், இந்திய அணியின் பவுலிங் யூனிட் மட்டும் இல்லாமல், பேட்டிங் யூனிட்டும் மிக பலமான ஒன்றாக இருக்கும். இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இந்திய அணியாலும் பேட்டிங்கில் சவால் கொடுக்க முடியும்.

தற்போதைய இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் இருப்பவர்களில் ரோகித் சர்மா மிகச் சிறப்பாக ஆப் ஸ்பின் வீசக்கூடிய பகுதி நேர பந்துவீச்சாளராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பார்.

ஆனால் அவர் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு பந்து வீசுவதை நிறுத்திவிட்டார். தற்பொழுது அவர் பகுதிநேரமாக நான்கைந்து ஓவர்கள் பந்து வீசுவதாக இருந்தால், இந்திய அணிக்கு உலகக்கோப்பையில் மிகப்பெரிய விஷயமாக அமையும்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா கூறுகையில் “பவுலிங் செய்யும் பொழுது எனது விரலில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக எனது பேட்டிங் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால் நான் வலைகளில் பந்து வீசிக் கொண்டுதான் வருகிறேன். உலகக் கோப்பையில் பார்ப்போம்!” என்று கூறி இருக்கிறார்!