கே எல் ராகுலுக்கு பதில்  தொடக்க வீரர்களாக யாரை சேர்க்கலாம் – போட்டியில் 3 வீரர்கள்

0
2034

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் 17 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளார். கே எல் ராகுல் கடந்த 11 இன்னிங்ஸில் ஒரே ஒரு முறை மட்டும் தான் அரை சதம் அடித்திருக்கிறார். அவருடைய சராசரி 18 என்ற அளவில் மிகவும் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது.இந்த நிலையில் கே எல் ராகுலை அணியை விட்டு நீக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில் கே எல் ராகுல் நீக்கப்பட்டால் அவருக்கு பதில் களம் இறங்க வாய்ப்பு இருக்க க்கூடிய நான்கு தொடக்க வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். கே எல் ராகுல் அணியில் இல்லை என்றால் அந்த இடத்திற்கு தானாக வரக்கூடிய நபர் என்றால் அது சுப்மன் கில் தான். இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வரும் சுப்மன் கில் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி வீரர் விருதை வென்றார். மனதளவில் நல்ல உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் சுப்மன் கில் இருப்பதால் கே எல் ராகுலுக்கு மாற்றுவீராக இருக்க நல்ல பயனை தரும்.

சுப்மன் கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் கண்டிப்பாக ராகுல் போல் சொதப்ப மாட்டார் என்பது மினிமம் கேரன்டி. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த மாயங் அகர்வால் தான். இந்திய அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவம் உடைய அகர்வால் இரண்டு இரட்டை சதமும் அடித்திருக்கிறார். சராசரியாக 41 ரன்கள் வைத்திருக்கிறார். இதனால் கே எல் ராகுலை விட மாயங் அகர்வால் ஒரு நல்ல மாற்றுவீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கூட ரஞ்சிக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் மாயங் அகர்வால் போராடி இரட்டை சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

இதற்கு அடுத்தப்படியாக இருக்கக்கூடியவர் 27 வயதான பெங்காலை சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன். இந்திய ஏ அணியில் ஆஸ்த்தான தொடக்க வீரராக களமிறங்கி தன்னுடைய திறமையை நிரூபித்தாலும் இந்திய அணியில் இடம் கிடைத்தும் இதுவரை பிளேயிங் லெவனில் விளையாடவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி  தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் அபிமன்யூ ஈஸ்வரன் சதம் அடித்தார். மேலும் நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் மூன்று சதமும் மூன்று அரை சதமும் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

இதனால் அபிமன்யூ ஈஸ்வரனை நீண்ட காலத்திட்டத்திற்கு தொடக்க வீரராக பயன்படுத்தலாம். இந்த மூன்று வீரர்களையும் பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் குல்தீப் யாதவையாவது தொடக்க வீரராக களம் இறக்கினால் அவர் பந்தை தடுத்து ஆட்டமிழக்கமாலும் நிற்பதோடு,  பந்து வீசு உதவியாக இருப்பார் என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.