ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்? ஆஸ்திரேலியா கிரவுண்டுக்கு யார் சரியாக இருப்பார் – மேத்தியூ ஹைடன் சிறப்பான பதில்!

0
2105

ஆஸ்திரேலிய மைதானத்தில் விளையாடுவதற்கு ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் சரியான வீரராக இருப்பார் என்று மேத்தியூ ஹைடன் பதில் அளித்துள்ளார்

டி20 உலக கோப்பை தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க இருக்கிறது. அதில் பங்கேற்பதற்கான இந்திய அணி செப்டம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து இதைப் பற்றிய விவாதங்களே நிலவி வருகின்றன. முதலில் பந்துவீச்சு குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதன் பிறகு ஆல்ரவுண்டர்கள் பற்றி பேசினார்.

- Advertisement -

தற்போது விவாதம் ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் சுனில் கவாஸ்கர், கில்கிரிஸ்ட், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பதிலை தெரிவித்து இருக்கின்றனர். தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் இதற்கு பதில் அளித்துள்ளார்.

“கீழ் வரிசையில் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இருவரில் ஒருவரை மட்டும் எடுக்க வேண்டும் என்றால், நான் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வேன். ஏனெனில் ஆஸ்திரேலியா மைதானம் மிகப்பெரியதாக இருக்கும். ஒரு சில மைதானம் மட்டுமே சிறிய அளவில் இருக்கிறது. ஆகையால் பேட்டிங் செய்யும் வீரர் பவராக இருக்க வேண்டும். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் ரிஷப் பண்ட் நன்கு பவராக அடிக்கக்கூடியவர். தினேஷ் கார்த்திக் மிகப் பெரிய கிரவுண்டுகளை கிளியர் செய்யமாட்டார். குறிப்பாக மெல்போன் மற்றும் சிட்னி 2 மைதானங்களும் மிகப்பெரியது. அதில் ரிஷப் பன்ட் அடிக்கும் பந்துகள் எளிதாக கிரவுண்டை விட்டு வெளியே சென்று விடும்.

ரிஷப் பண்ட் மட்டுமல்லாது, பிளேயிங் லெவனில் குறைந்தது மூன்று முதல் நான்கு வீரர்கள் மிகப் பெரிய ஷாட்களை விளையாடும் அளவிற்கு பவரான வீரர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணியால் அதிக ஸ்கோரை எட்ட முடியும். இல்லையெனில் பவுண்டரிகள் குறைபாடு காரணமாக ஸ்கோரில் சிக்கல் ஏற்படலாம்.” என்றார்.

- Advertisement -