நாளை யார் ஓபனர்? சூர்யா இருப்பாரா? – கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையான பதில்!

0
9759
Rohitsharma

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியிடம் 2-1 தோற்று தொடரை இழந்தது!

இதற்கு அடுத்து இலங்கை அணி இந்திய அணி உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை துவங்க இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்கிறார்!

ஒருநாள் அணியில் ஷிகர் தவான் நீக்கப்பட்டு இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். அதே சமயத்தில் தற்பொழுது சூரியகுமார் யாதவ் மிகச்சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஆனால் இவர்களில் நாளை துவங்கும் ஆட்டத்தில் யாருக்கு இடம் கிடைக்கும் என்று வெளிப்படையாக ரோஹித் சர்மா பேசியிருக்கிறார்!

இது குறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது ” கில் மற்றும் இசான் கிசான் இருவரும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இருவரும் தொடர்ந்து எப்படி சென்றுள்ளனர் என்று பார்க்கும் பொழுது நியாயமாக கில்லுக்கு இன்னொரு வாய்ப்பு தர வேண்டியது அவசியம். ஏனெனில் கடந்த சில ஒரு நாள் போட்டிகளில் அவர் நிறைய ரன்களை எடுத்துள்ளார். நான் இஷான் இடமிருந்து எதையும் எடுக்கப் போவதில்லை. அவர் எங்களுக்கு அருமையாக இருந்துள்ளார். அவர் இரட்டை சதம் அடித்துள்ளார். இரட்டை சதம் ஒரு நாள் போட்டியில் அடிக்க எவ்வளவு திறமை வேண்டும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அது ஒரு பெரிய சாதனை. ஆனால் நாங்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

அடுத்து அணியின் மிடில் வரிசை பற்றி கூறும்பொழுது ” இதுதான் ஒரு மிகப்பெரிய தலைவலி. இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ள வெவ்வேறு வீரர்களின் செயல் திறனை பார்ப்போம். வெவ்வேறு கிரிக்கெட் வடிவங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பெரிய சிக்கல் உருவாகிறது. இதனால் நாம் நமக்கு ஒரு நாள் போட்டியில் யார் இதுவரை சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் பார்க்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனின் பார்ம் முக்கியம்தான். அதேபோல் அவர் எந்த கிரிக்கெட் வடிவத்தில் ரன்கள் அடித்திருக்கிறார் என்பதும் முக்கியம் ” என்று கூறியிருக்கிறார்!

ரோகித் சர்மா பேசியிருப்பதிலிருந்து நாளைய போட்டியில் இசான் கிசானுக்கும், சூரியகுமார் யாதவிற்கும் அணியில் இடம் இருக்காது என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது. ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஒரு வீரர், இரண்டு நாட்களுக்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் அதிரடி சதம் அடித்த ஒரு வீரர், இவர்கள் இருவரையும் விலக்கி வைப்பது சரியாக வருமா என்று ஆட்டத்தில் வீரர்கள் செயல்பட்டு முடிவுகள் வருவதை பொறுத்துதான் தெரியும்!