விராட் கோலியா? சூரியகுமார் யாதவா? யார் பெஸ்ட் டி20 பேட்ஸ்மேன் – விரேந்திர சேவாக் பதில்!

0
2681

சூரியகுமார்? விராட் கோலி? யார் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடினார்கள்? – சேவாக் பதிலளித்துள்ளார்.

இந்திய அணிக்கு நடந்து முடிந்த டி20 உலக கோப்பைத் தொடர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முற்றிலுமாக ஏமாற்றிதை கொடுத்திருக்கிறது. குறிப்பாக அரை இறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்துடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பேரதிர்ச்சியை கொடுத்தது.

இந்த தொடர் முழுவதும் இந்தியாவிற்கு பேட்டிங்கில் நம்பிக்கையாக திகழ்ந்தது விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தான்.

விராட் கோலி 4 அரைசதங்களுடன் 296 ரன்கள் அடித்து, சராசரியாக 75 ரன்கள் வைத்திருந்தார். சூரியகுமார் யாதவ் 239 ரன்கள் அடித்து சராசரியாக 58 ரன்கள் வைத்திருக்கிறார். இவர் மூன்று அரைசதங்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி வெளியிட்ட இந்த உலக கோப்பையில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியில் இவர்கள் இருவரும் இடம் பிடித்திருக்கின்றனர்.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா? சூரியகுமார் யாதவா? என்ற விவாதம் தற்போது எழுந்திருக்கிறது. இதற்கு ஆசிஸ் நெக்ரா, ஜாகிர் கான், சேவாக் போன்ற வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இருவரில் இவர்தான் சிறந்தவர் என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் முன்னாள் துவக்க வீரர் வீரேந்திர சேவாக்.

“எனது வாக்கு விராட் கோலிக்கு தான். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இறுதி வரை போராடி வெற்றியை பெற்றுத் தரவில்லை என்றால் இந்திய அணிக்கு சரியான துவக்கம் உலக கோப்பையில் கிடைத்திருக்காது. வெற்றிகளுடன் இந்தியா துவங்கியதற்கு முழு முக்கிய காரணம் அவர் தான்.

மேலும், பேட்டிங் ஃபார்மை தொடர் முழுவதும் எடுத்துச் சென்றார். இந்த உலக கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன் அவர்தான்.” என்றார்.

யாருடைய இன்னிங்ஸ் இந்த உலககோப்பையில் சிறப்பாக இருந்தது? என கேட்டதற்கு, “சிறப்பான இன்னிங்ஸ் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் அடித்த சதம்.” என்றும் சேவாக் தெரிவித்தார்.